தன்னை சிலர் பிளாக்மெயில் செய்து வருவதாக நித்யானந்தா கூறியுள்ளார். பெங்களூர் பிடுதியில் உள்ள தனது ஆசிரமத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில், நான் யாரையும் மெஸ்மரிசம் செய்யவில்லை. இந்து பாரம்பரியத்தை அறிவியல்ரீதியாக பாதுகாக்கும் என்னை குற்றவாளியாக ஜோடிக்க முயற்சி்ப்பதன் மூலம் அந்தப் பாரம்பரியத்தையே கொச்சைப்படுத்த முயன்றனர். என் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரஞ்சிதாவை பாதிக்கப்பட்டவர் போல காட்ட முயற்சித்தனர். பின்னர் கோபிகாவை பாதிக்கப்பட்டவர் போல காட்ட முயற்சி நடந்தது. என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்ளும் பொய்யானவை.
எனக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த யாராலும் பாதிப்பு வந்ததே இல்லை. அதற்காக கர்நாடக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பொய்யான வீடியோவை உருவாக்கி என்னை சிலர் பிளாக்மெயில் செய்து வருகின்றனர். என்னிடம் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டினர். சிலர் எனது பக்தர்களை மிரட்டி பணம் பறித்தனர். எனக்கு உலகம் முழுவதும் 1 கோடி பக்தர்கள் உள்ளனர். சில பவர்புல் மனிதர்களால் எனது உயிருக்கு ஆபத்து நிலவுகிறது என்றார்
0 comments:
Post a Comment