Saturday, February 5, 2011

36 ஆண்டுகளாக இருட்டில் வாழும் மக்கள்!! கேடுகெட்ட தமிழக அரசியல்!

திருப்பரங்குன்றம்: மதுரை அருகே 36 ஆண்டுகளாக இருட்டில் வாழும் பசுமலை அண்ணாநகர் மக்கள் மின் இணைப்பு வழங்க கோரி, மின் அலுவலகத்தை 5 மணி நேரம் முற்றுகையிட்டனர். இலவச "டிவி' க்களை திருப்பி தர முடிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் அருகேயுள்ள பசுமலை அண்ணாநகர், மதுரை மாநகராட்சி 67வது வார்டு. 300 வீடுகள் உள்ளன. 36 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, 300க்கும் மேற்பட்டோர் காலை 8.30 மணிக்கு பசுமலை மின் அலுவலகத்திற்கு வந்தனர். இலவச "டிவி' க்களுடன், 5 மணி நேரம் முற்றுகையிட்டனர். பகல் ஒரு மணிவரை தீர்வு ஏற்படாததால், மின் அலுவலகம் முன், பெண்கள் சமையல் செய்தனர். டி.எஸ்,பி., பொன்ராம், இன்ஸ்பெக்டர் புருசோத்தமன், துணை தாசில்தார்கள் ராஜேந்திரன், நிஷா, ஆர்.ஐ., தனசேகரன், வி.ஏ.ஒ., ராமர் சமாதானம் பேசினர். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முற்றுகையிட்டவர்கள் கூறுகையில், ""36 ஆண்டுகளாக குடியிருக்கிறோம். மின் இணைப்பு கேட்டு, பல போராட்டங்கள் நடத்தினோம். ஆறுமாதங்களுக்கு முன், கலெக்டர், எங்களுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். அவர்கள் கூறுகையில், "கலெக்டர் மின் இணைப்பு வழங்க உத்தரவிடவில்லை என்றால், "டிவி' க்களை ஒப்படைத்து விடுவோம். ஏற்கனவே ஐந்துமுறை தேர்தலை புறக்கணித்துள்ளோம். தீர்வு கிடைக்கவில்லையெனில் வரும் சட்டசபை தேர்தலையும் புறக்கணிப்போம்,' என்றனர்.

0 comments:

Post a Comment