தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு பணிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment