Wednesday, March 14, 2012

ஈரான் மீதான தாக்குதலும்... உலக பொருளாதார விளைவுகளும்...

முஹம்மத் ஜான்ஸின்

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவது உறுதி என அண்மையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக செய்யப்பட்ட தாக்குதலுக்கான தயாரிப்ப நடவடிக்கைகளை இஸ்ரேல் பூர்த்தி செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அந்த தாக்குதலுடன் யுத்தம் முடிவுக்கு வருமா அல்லது யுத்தம் பல நாட்களுக்கு தொடருமா என்பதை ஆராய்வோம்.
ஏழறை மில்லியன் சனத்தொகையை கொண்ட இஸ்ரேல் 77 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஈரானுடன் சவால் விடவதை சும்மா எண்ணிவிட முடியாது. இஸ்ரேல் 1964 யுத்த விமானங்களையும் ஏழறை இலட்சம் படைவீரர்களையும் 3230 யுத்த தாங்கிகளையும் கொண்ட ஒரு நாடாகும். பதிலுக்கு ஈரான் 1030 யுத்த விமானங்களையும் பதினொரு இலட்சம் படைவீரர்களையும் 1793 யுத்த டாங்கிகளையும் கொண்ட ஒரு நாடாகும். 

Add caption
இஸ்ரேல் மேற்கத்தைய நாடுகளின் உதவியுடன் தொழில் நுட்பத்தில் முன்னேறிய ஒரு இரானுவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பதிலுக்கு ஈரான் கடுமையான பொருளாதார தடைகளுக்கு உடபட்ட நிலையில் நாடுகளின் உதவிகள் குறைவான நிலையில் தனது ஆயுத வளத்தை நவீனமயப்படுத்தியுள்ள ஒரு நாடாகும். 

இஸ்ரேல் ஈரான் மீதோ அல்லது ஈரான் இஸ்ரேல் மீதோ தாக்குதல் நடாத்துவதானால் அது பல நாடுகளை கடந்து வந்து தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டிய நிலமை உள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான இடைவெளி ஏறக்குறை 2200 இலிருந்து 3000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமானதாகும். இஸ்ரேலைப் பொறுத்த வரை ஈரான் மீது தாக்குதல் நடத்த லெபனான், சிரியா, ஜோர்தான், துருக்கி, ஈராக், சவுதி அரேபியா, போன்ற நாடுகளில் ஏதாவது மூன்று நாடுகளை கடக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே சவுதியும் சிரியாவும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வும் தமது பிரதேசத்துக்கு மேலாக நடத்தப்படும் இஸ்ரேலின் தாக்குதல்கள் முறியடிக்கப்படும் என்று அந்நாடுகள் தெரிவித்துள்ளன. தற்போது சிரியாவில் காணப்படும் அமைதியற்ற நிலமை இஸ்ரேலுக்கு சாதகமாகவுள்ளது. எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம். 

அவ்வாறு தாக்குதல் நடத்தப்படுமிடத்து தன்னை சுதாகரித்துக் கொள்ளும் ஈரான் மிகவிரைவில் பதில் தாக்குதலை நடத்தும். இத்தாக்குதல் ஏவுகணைத் தாக்குதலாகவும் விமானத்தாக்குதல்களாகவும் இருக்கும். ஈரான் பதில் தாக்குதல் நடத்துமிடத்து ஈரானுடன் லெபனானும் சிரியாவும் சேர்ந்து கொள்ளக்கூடும். அவ்வாறு இந்நாடுகள் ஓரணியில் திரளும் போது இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் யுத்தத்தில் களமிறங்கும். 

நேட்டோ களமிறங்குமிடத்து ஈரானின் கூட்டு நாடுகள் கடும் சேதாரத்தையும் அழிவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஈரானுக்கு உதவியாக ரஸ்யா வரக் கூடும். ரஸ்யாவின் உதவிகளைத் தடுக்க ஐரோப்பாவிலும் அஜர்பைஜான் மற்றும் துருக்கி நாடுகளில் அமெரிக்கா தனது இரானுவ தளங்களை அமைத்துள்ளது. யுத்தத்தில் இரு பகுதியிலும் பேரிழப்புகள்; ஏற்படக் கூடும். சிலவேளை இதுவே மூன்றாவது உலக யுத்தமாகவும் மாறலாம். யுத்தத்தில் ஈரான் தோற்றால் மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகள் எல்லாம் முஸ்லிம்களின் கையிலிருந்து சென்று விடக் கூடும். 

இந்த ஒற்றுமையற்ற தன்மையினால் நாடுகள் மட்டுமல்ல முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளிலும் முஸ்லிம்கள் தமது பிரதேசங்களையும் முக்கியத்துவத்தையும் இழப்பார்கள். 

ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மசகு எண்ணையின் விலை மீண்டும் 150 டொலர்களை தாண்டும். மேலும் அரபு நாடுகளில் பல உள்நாட்டு கலவரங்கள் ஏற்படலாம். இதனால் உலகின் பல நாடுகளில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்களின் உற்பத்தி குறைவடையும். கப்பல் போக்கு வரத்துகள் விமான போக்குவரத்துகள் தடைப்பட்டு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படக் கூடும். 

இதனால்; விவசாயம் பண்ணை வளர்ப்புத் தொழில்களும் பாதிப்படையக் கூடும்.பொருட்களின் விலைகள் சடுதியாக உயரக்கூடும். இது ஓரிரண்டு வருடங்களில் பெரும் பஞ்சத்தை உலகில் தோற்றுவிக்கலாம். எனவே ஈரான் மீதான தாக்குதல் இடம்பெறாமல் தடுப்பது உலக நாடுகள் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
thanks to qahtaninfo.blogger

0 comments:

Post a Comment