Thursday, March 29, 2012

மஸ்ஜிதுல் அக்ஸாவை தகர்க்க இஸ்ரேல் சதி!

தடுக்கமுடியாத நிலையில் முஸ்லிம்கள்! - டாக்டர் ஷேக் யூசுப்..
இஸ்ரேல் ராணுவத்தின் கொடிய அராஜகத்தால் ஃபலஸ்தீன் மக்கள் கடுமையான பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாக பைத்துல் முகத்தஸின்(மஸ்ஜிதுல் அக்ஸா) இமாமும், நீண்டகாலம் ஃபலஸ்தீன் மார்க்க விவகார அமைச்சராக பணியாற்றியவருமான டாக்டர் ஷேக் யூசுஃப் ஜுமா ஸலாமா கூறினார்.

கேரள மாநிலம் ஃபாரூக் கல்லூரியில் ரவ்ழத்துல் உலூம் அரபிக் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார் அவர். அப்பொழுது அவர் கூறியது.

மஸ்ஜிதுல் அக்ஸாவை தகர்ப்பதற்கு இஸ்ரேலின் சதித்திட்டம் சக்திவாய்ந்ததாகும். அதனை தடுக்க கூட முடியாத நிற்கதியான சூழலில் ஃபலஸ்தீன் மக்கள் உள்ளனர். பரிசுத்த நகரத்தின் கண்ணியத்தை சீர்குலைக்க மது, ஆபாசம் போன்றவற்றை பரப்பும் மோசமான வழிகளையும் இஸ்ரேல் ராணுவம் கடைப்பிடிக்கிறது. ஒரு நாட்டை கலாச்சார ரீதியாக அழிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி பைத்துல் அக்ஸாவை தகர்க்க முயற்சிக்கிறார்கள். பல வருடங்களாக மேற்கொள்ளும் ரகசிய திட்டமாகும். மஸ்ஜித் தானே இடிந்து விழுந்ததாக காட்டுவதற்கு இவ்வாறு அவர்கள் முயற்சிக்கிறார்கள். மஸ்ஜித் நிலைப்பெற்றிருக்கும் இடத்தில் ஸாலமன் ஆலயத்தை கட்டுவதும் அவர்களின் அஜண்டாவாகும். இத்தகைய ரகசிய திட்டங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் மண்ணில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால் சியோனிஸ்டு வன்முறையாளர்கள் கிறிஸ்தவர்களையும் சும்மா விடுவதில்லை. அண்மையில் இருபது முஸ்லிம் மஸ்ஜிதுகள், ஆறு கிறிஸ்தவ சர்ச்சுகளை இஸ்ரேலிய ராணுவம் தீக்கிரையாக்கியது. இரு பிரிவினரும் இணைந்தே ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம்.

பைத்துல் அக்ஸாவிற்கு முஸ்லிம்கள் எச்சரிக்கையோடும், பதுங்கியும் வருகின்றார்கள். மஸ்ஜித் எப்பொழுதும் இஸ்ரேல் ராணுவத்தின் பலத்த கண்காணிப்பில் உள்ளது. மஸ்ஜிதுக்கு வருபவர்கள் அச்சம் காரணமாக திரும்பிச்செல்வது வழக்கமாகும்.

ஹமாஸ்-ஃபதஹ் அமைப்பினர் இடையே இடைவெளி ஏறக்குறைய நீங்கியுள்ளது. இவர்கள் இடையேயான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளது. மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் யாஸிர் அரஃபாத்துக்கும், ஷேக் அஹ்மத் யாஸீனுக்கும் இடையே நல்ல உறவை பேணினார்கள். அரபு வசந்தம் மாற்றத்தின் குரல் ஆகும். பல கால மாக ஒரு சமூகம் விரும்பிய புரட்சியாகும்.

இந்தியாவுக்கும் ஃபலஸ்தீனுக்கும் இடையேயான நல்லுறவு பல தசாப்தங்கள் பழமையானது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய அணிசேரா கொள்கை இந்த உறவை பலப்படுத்தியது. துவக்கம் முதலே ஃபலஸ்தீன் விவகாரத்தில் இந்தியா எங்களுடன் தான் இருந்து வருகிறது. நேருவை கெளரவிக்கும் விதமாக காஸ்ஸாவில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் நேரு கார்னர் உள்ளது. நேருவின் நூற்களும் இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஷேக் யூசுஃப் ஜுமா ஸலாமா அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இருந்து பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர். 1998 முதல் 2006 வரை இரண்டு தடவை ஃபலஸ்தீனில் மார்க்க விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஃபலஸ்தீனில் முதன் முதலாக திருக்குர்ஆன் ஓதும் போட்டி இவரது பதவிக் காலத்தில் நடந்தது. ஃபலஸ்தீன் பல்கலைக்கழக பேராசிரியராகவும் சேவை புரிந்துள்ள ஷேக் ஸலாமாவிற்கு 58 வயது ஆகிறதுthanks to qahtaninfo

0 comments:

Post a Comment