March 09: அமெரிக்காவில் இந்திய தூரக அதிகாரியாக பணிபுரிபவர் நீனா மல்கோத்ரா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வீட்டு வேலைகள் செய்ய சாந்தி என்கிற பெண்ணை அழைத்து வந்தார்.
அமெரிக்கா வந்ததும் அந்த பெண்ணின் பாஸ்போர்டை பறித்து வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாது அவருக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்கினார். மேலும் அவருக்கு சரியான உணவும், தாங்கும் இடம் வசதியும் செய்து கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சாந்தி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். இந்திய தூதரக அதிகாரிமேல் சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்பட்டு அவருக்கு 1 .5 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய்க்கு கிட்ட தட்ட 68 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நியூயார்க் கோர்ட் தீர்பளித்துள்ளது.
இப்படியாக இந்தியாவின் தூதரக சேவை உலகம் முழுவதும் நாறுகிறது. இந்தியாவின் கேவலமான தூதரக சேவை பற்றி கருத்து கேட்க வேண்டும் என்றால் அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களை கேட்டால் தெரியும். ஆசியாவில் உள்ள நாடுகளில் செயல்படும் இந்திய தூரகங்களின் நிலைதான் இப்படி என்றால் ஐரோப்பாவில் இருக்கும் இந்திய தூதரங்கள் அதற்க்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்துள்ளனர்.
இந்தியாவில் பண்ணை முதலாளிகளும், பணக்காரர்களும் கூலித்தொழில் முதல் வீட்டு வேலை வரை ஏழை மக்களை கொடுமைபடுத்துகிறார்கள். இதையெல்லாம் கேட்க இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. சமிபத்தில் வடநாட்டில் ரூ 300 திருப்பி கொடுக்க வேண்டும் என்பதற்காக கூலி தொழிலாளியின் கைகளை வெட்டியெடுத்த சம்பவம் இப்படி தினம் தினம் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பெருகிக் கொண்டே போகிறது. நிலைமை இப்படி இருக்க ஒரு கும்பல் 2020 இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்று மக்களை ஏமாற்றிவருகிறது.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.
0 comments:
Post a Comment