Saturday, March 24, 2012

ஃபஜல் கொலை வழக்கு - சிபிஐ முன் ஆஜராகாத சிபிஐஎம் தலைவர்



கன்னூர்: தளசேரியில் முஹம்மது ஃபஜல் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சி.பி.ஐ.எம்-ன் தலைவர் சந்திரசேகரன் சிபிஐ அதிகாரிகளுக்கு முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்றத்தின் ஆணையை பொருட்படுத்தாமல் அவமதித்துள்ளார்.
சி.பி.ஐ.எம்-ன் திருவங்காடு செயலாளராக இருப்பவர் சந்திரசேகரன், முஹம்மது ஃபஜல் கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் முன் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்பது நீதிமன்றத்தின் ஆணை. இது தொடர்பாக சந்திரசேகருனுக்கு ஐந்து நாட்கள் முன்பாகவே சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இக்கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ அதிகாரிகள் சந்திரசேகரனை விசாரித்திருக்கின்றனர்.

தன்னை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே அவர் அதிகாரிகள் முன்பு ஆஜாராகவில்லை என்று கூறப்படுகிறது. சந்திரசேகரன் கைது செய்யப்பட்டால் இவ்வழக்கில் மற்ற சிபிஐஎம் தலைவர்களின் பங்கும் வெளிவந்துவிடும். குறிப்பாக முன்னால் மாவட்ட செயலாளர் பி.சசி, தளச்சேரி பகுதி செயலாளர் கறயி ராஜன் ஆகியோருடைய பங்கும் தெரிந்துவிடும்.
இதற்கு முன்பாக மூன்று சி.பி.ஐ.எம் குண்டர்கள் இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  என்.டி.எஃப் (தற்போது பாப்புலர் ஃப்ரண்ட்)ன் உறுப்பினரான முஹம்மது ஃபஜல் கடந்த 2006 ஆம் சி.பி.ஐ.எம் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment