மும்பை: எந்த ஒரு சமுதாயத்திற்கும் வாய்த்திறாத சிறப்பான ஒரு தருணம் தான் முஸ்லிம்களுக்காக இறைவன் வழங்கியிருக்கின்ற ஜும்மா தருணம். இந்த ஜும்மா நாட்களில் 90% மேற்பட்ட முஸ்லிம்கள் நிச்சயமாக இறைவனின் வீட்டிற்காக தொழுகைக்குச்செல்வார்கள். அச்சமயத்தை இமாம்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டு சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அலீமீ மூவ்மெண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 18ஆம் ஆண்டு பைக்குல்லா (மும்பை) என்ற இடத்தில் உள்ள மஸ்ஜிதே மோட்டி என்ற பள்ளிவாசலில் ஆலிமீ மூவ்மெண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இமாம்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பெரும்பாலான இமாம்களுக்கும் உலமாக்களுக்கும் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நிலவி பிரச்சனைகள் பற்றிய விரிவான் பார்வை இல்லாமல் இருக்கின்றது. ஜும்மா உரை நிகழ்த்தும் இமாம்களும், உலமாக்களும் திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தைப்பற்றிய செய்திகளையே கடந்த 25 வருடங்களாக பேசி வருகின்றனர். அவர்களுக்கு புதிய தலைப்புகளில் ஜும்மா உரைகளை நிகழ்த்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூக மக்களை சிறந்த முறையில் நல்வழியில் செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மெளலானா சமீம் அஷ்ரஃப் அஜாரி கூறும்போது ஆலிமீ மூவ்மெண்ட் ஆஃப் இந்தியா இமாம்கள் ஜும்மா தினங்களில் உரை நிகழ்த்துவதற்கான தலைப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் இமாம்களை மஸ்ஜிதில் நியமிப்பதற்கு முன்னால் அதற்குண்டான முறையான பயிற்ச்சிகளை அவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும், பொருளாதார ரீதியான உதவிகளையும் இமாம்களுக்காக செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் அமீர் அவர்கல் உரையாற்றும்போது இமாம்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் நம்முடைய இமாம்களும், உலமாக்களும் காலத்திற்கேற்ப தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளாததது வேதனையான விஷயமாக இருக்கிறது. அவர்களுடைய ஜும்மா உரைகள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவே தான் சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை இமாம்களால் அளிக்க முடியவில்லை என அவர் கூறினார்.
காரி முஸ்தாக், மெளலானா முஹம்மது சமீம் அஜாரி, மெளலானா மொய்னுல் ஹக் அமீனி மற்றும் பல இமாம்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடந்த 18ஆம் ஆண்டு பைக்குல்லா (மும்பை) என்ற இடத்தில் உள்ள மஸ்ஜிதே மோட்டி என்ற பள்ளிவாசலில் ஆலிமீ மூவ்மெண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இமாம்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பெரும்பாலான இமாம்களுக்கும் உலமாக்களுக்கும் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நிலவி பிரச்சனைகள் பற்றிய விரிவான் பார்வை இல்லாமல் இருக்கின்றது. ஜும்மா உரை நிகழ்த்தும் இமாம்களும், உலமாக்களும் திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தைப்பற்றிய செய்திகளையே கடந்த 25 வருடங்களாக பேசி வருகின்றனர். அவர்களுக்கு புதிய தலைப்புகளில் ஜும்மா உரைகளை நிகழ்த்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூக மக்களை சிறந்த முறையில் நல்வழியில் செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
இவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் அமீர் அவர்கல் உரையாற்றும்போது இமாம்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் நம்முடைய இமாம்களும், உலமாக்களும் காலத்திற்கேற்ப தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளாததது வேதனையான விஷயமாக இருக்கிறது. அவர்களுடைய ஜும்மா உரைகள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவே தான் சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை இமாம்களால் அளிக்க முடியவில்லை என அவர் கூறினார்.
காரி முஸ்தாக், மெளலானா முஹம்மது சமீம் அஜாரி, மெளலானா மொய்னுல் ஹக் அமீனி மற்றும் பல இமாம்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment