புதுடெல்லி:பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மியின் கைதை கண்டித்து டெல்லி பத்திரிகையாளர்கள் யூனியன் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஊடுருவிய டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் உளவுத்துறை அதிகாரியை பத்திரிகையாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
டெல்லி ப்ரஸ் க்ளப்பில் இச்சம்பவம் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு துவங்கும் முன்பு அதிகாரியை ப்ரஸ் க்ளப் நிர்வாகிகள் வெளியேற்றியிருந்தனர். ஆனால், பத்திரிகையாளர்கள் சந்திப்பு துவங்கிய பிறகு யாரும் காணாமல் உள்ளே நுழைந்துள்ளார் அந்த அதிகாரி.
கழுத்தில் தொங்கவிட்டிருந்த அடையாள அட்டையை வெளியே தெரியாத வகையில் சட்டைக்குள் மறைத்து வைத்தவாறு பத்திரிகையாளர் போல் நின்றிருந்தார் அந்த அதிகாரி. பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்த உடனே எல்லோரும் எழுந்தபோது ஒரு பத்திரிகையாளர் அவரை அடையாளம் கண்டுகொண்டார். உடனே அவர் ‘போலீஸ்… பிடியுங்கள் அவனை!’ என்று சத்தம் போடவே, ஓடி தப்ப முயன்ற அவரை பத்திரிகையாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தான் ஒரு பத்திரிகையாளர் என்று மழுப்பிய அவரை மேலும் விசாரித்தபொழுது பத்திரிகையாளர் சந்திப்பை காண்பதற்காக வந்தேன் என்று கூறியுள்ளார். ஆனால், மேலும் விசாரிக்கும்பொழுது அவரது சட்டைக்குள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்த அடையாள அட்டையை பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் தான் ஒரு போலீஸ்காரன் என்று ஒப்புக்கொண்ட அந்த நபர் சும்மா வந்தேன் என்று மழுப்பலான பதிலை கூறி பத்திரிகையாளர்களிடமிருந்து தப்பி விட்டார்.
thanks to asiananban blogger
0 comments:
Post a Comment