Monday, March 12, 2012

சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் RSS தீவிரவாதியிடமிருந்து புதிய தகவல் ...!


 புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் உபயோகித்த வெடிக்குண்டை மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பங்காளி சவ்ராவில் உள்ள வாடகைக்கு எடுத்த அறையில் வைத்து தயாரித்ததாக லோகேஷ் சர்மா தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட லோகேஷ் சர்மாவை தேசிய புலனாய்வு ஏஜன்சி 2006 மலேகான் வழக்கில் குற்றவாளியாக சேர்த்து கைது செய்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சர்மா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக கூடுதல் விபரங்களை தெரிவித்துள்ளான்.
குண்டை தயாரிக்க தேவையான டெட்டனேட்டர், இரும்பு பைப்புகள், டைமர்கள் ஆகியன வெடிக்குண்டை தயாரித்த அறையில் பாதுகாக்கப்பட்டிருந்தன. வழக்கில் இன்னொரு குற்றவாளியான அமீத் சவுகானின் பெயரில் அறையை வாடகைக்கு எடுத்ததாகவும் லோகேஷ் சர்மா கூறினான்.
குண்டுகளை பரஸ்பரம் இணைப்பதற்கு இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ராம்ஜி கல்சங்கராவும், அமீத் சவுகானும் இதே அறையில் பல மணிநேரங்களை செலவழித்துள்ளனர்.
கொலைச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியும், தேடப்பட்டுவரும் குற்றவாளியான சந்தீப் டாங்கேவும் அடிக்கடி இங்கு வருகை தந்துள்ளனர் என்று லோகேஷ் சர்மா விசாரணையின் போது தெரிவித்துள்ளான்.
மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் உபயோகிக்கப்பட்ட குண்டுகளும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் உபயோகிக்கப்பட்ட குண்டும் ஒரே போன்றவை என்று என்.ஐ.ஏ(தேசிய புலனாய்வு ஏஜன்சி) அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரும்பு பைப்பை உபயோகித்து இக்குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குண்டுகள் இணைக்கப்பட்ட முறையில் ஒரேபோல அமைந்திருந்தன. ஒரே குழுவினர்தாம் இச்சம்பவங்களின் பின்னணியில் செயல்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்குண்டுவெடிப்புகளை நிகழ்த்த விரிவான சதி ஆலோசனைகள் நடந்துள்ளன என்று என்.ஐ.ஏ கூறுகிறது. சுவாமி அஸிமானந்தா, பரத் ரிதேஷ்வர் ஆகியோர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பணம் அளித்துள்ளனர். சுனில்ஜோஷி, சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் வெடிக்குண்டுகளை தயாரித்து திட்டம் தீட்டியுள்ளனர். லோகேஷ் சர்மா, கமல்சவுகான், தேவேந்திர குப்தா ஆகியோர் வெடிக்குண்டை வைக்க உதவியுள்ளனர் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
thanks to asiananban

0 comments:

Post a Comment