Tuesday, March 27, 2012

உலகில் அதிகம் பேர் வேலை செய்யும் நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு!




உலகில் அதிகம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனம் எது என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. சுமார் 32 லட்சம் பேர் அமெரிக்க இராணுவத்தில் வேலை பார்க்கின்றனர்.



அடுத்த இடத்தில் இருப்பது சீன இராணுவம். இதில் இருப்பவர்களோ 23 லட்சம் பேர். அமெரிக்க தன் படையில் வேலை செய்யும் சிவிலியன்களையும், மகவும் அவசரமாகத் தேவை ஏற்படும் போது மட்டுமே படைக்கு அழைக்கப்படும் ரிசர்வ் துருப்புக்களையும் தனது மொத்த படை எண்ணிக்கையில் சேர்த்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை படைவீர்ர்களின் எண்ணிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் மொத்தம் 21 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். மெக் டோனால்ட்டில் 19 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். ஆனால் இந்த நிறுவனங்களின் பல கிளைகள் தனிப்பட்ட முகவர்களால் நடத்தப்படுகின்றன.
இந்திய ரயில்வே


ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ள பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவையில் 17 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனத்தில் 16 லட்சம் பேரும், மற்றொரு அரச நிறுவனமான மின்தொகுப்பு நிறுவனத்தில் 15 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர்.

இந்தப் பட்டியலில் 14 லட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய ரயில்வேவுக்கு எட்டாவது இடமும், 13 லட்சம் பேர் கொண்ட இந்திய இராணுவத்துக்கு 9 ஆவது இடமும் கிடைத்துள்ளன. ஆப்பிள் ஐ போன், ஐ பேட் போன்றவைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதன் ஊழியர்களின் எண்ணிக்கை 12 லட்சம்.
thanks to qahtaninfo





0 comments:

Post a Comment