குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்குண்டு என்று கூறி அவருக்கு எதிராக நியூயார்க்கில் 40 இந்திய-அமெரிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற பதாகைகளுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் மன்ஹாட்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே நேற்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
குஜராத் வன்முறைச் சம்பவங்களின் 10வது ஆண்டு தினத்தை குறிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment