Wednesday, March 7, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மணிப்பூரில் கல்விக்கான பிரச்சாரம்



இம்பால்: கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் கல்விக்கான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் இதற்கான பிரச்சார நிகழ்ச்சி மணிப்பூர் மாநிலம் லிலாங்கில் பாபிடக் மேமங் லேகாய் உயர் நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் மணிப்பூர் மாநில தலைவர் முஃப்தி அர்ஷத் ஹுஸைன் காசிமி தலைமை தாங்கி நடத்தித்தந்தார்.
School Chalo Educational Project
"பள்ளி செல்வோம்" என்ற முழகத்துடன் நடைபெறவிருக்கும் இக்கல்வி பிரச்சாரத்தின் வாயிலாக‌ வறுமையின் காரணமாக கல்வி கற்க முடியாத ஏழை குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்பதும், கல்வி பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார பேரணிகளும், பள்ளிக்குழந்தைகளும் படிப்பு உபகரணங்களும் வழங்கப்படவிருக்கின்றன.

பிரச்சார நிகழ்ச்சியில் மாநில தலைவர் கூறும்போது "அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது எனவும், மணிப்பூர் மாநிலத்தில் முஸ்லிம்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தார். கல்வி பற்றிய முறையான விழிப்புணர்வு இல்லாததாலும், வறுமையின் காரணமாகவுமே முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருக்கின்றார்கள்.

பள்ளி செல்வோம் என்ற கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் நடத்தி வருகிறது. மணிப்பூரில் ஒவ்வொரு பட்டி தொட்டி எங்கும் சென்றும் வறுமையினால் கல்வி கற்க முடியாத குழந்தைகளின் கணக்கெடுப்பு நடத்தப்படும். வறுமையின் காரணமாக எந்த குழந்தையும் கல்வி கற்கவில்லை என்ற நிலையை மாற்றவேண்டும். அதே போன்று பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டவர்களையும் கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ளும் என்று கூறினார்.

கே.ஹெச். குளச்சந்திரா (தலைமை ஆசிரியர், பாபிடக் மேமங் லேகாய் உயர் நிலைப்பள்ளி) கூறும்போது வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்ட மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்வதற்கு தான் உதவியாக இருப்பேன் என்று கூறினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எம்.வி.அப்துல் மஜீத், எம்.வி.இர்ஃபானுதீன், அப்பகுதி கவுன்சிலர் ரூஹுல் அமீன், பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் மஃக்பூல் அஹமது மற்றும் சமூக சேவகர் ரூஹுல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சமூக மேம்பாட்டுத்துறையின் நிர்வாகியும் மாநில செயற்குழு உறுப்பினருமான சகோதர் ஹாஜி முஹம்மது இலியாஸ் அலி கூறும்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மணிப்பூரில் மூன்று கிராமங்களை தத்தெடுப்பதாக அறிவித்தார். போவிதெக், அடோகாங் (லிலோங்), மற்றும் சோரா ஆகிய மூன்று மாவட்டங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினால் தத்தெடுக்கப்படுகின்றன. இம்மூன்று கிராமங்களில் கல்வி உதவித்தொகைகள், சுயதொழில் செய்வதற்கான உதவிகள், மற்றும் மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
thanks chennaipfi

0 comments:

Post a Comment