Sunday, March 4, 2012

கீற்று இணையதளத்தை மிரட்டிய உளவுத்துறை!


March 03: கீற்று இணையத்தளம் தமிழ் மக்களால், வாசகர்களால் போற்றப்படும் ஒரு சிறந்த மக்கள் ஊடகம்.இது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தோலுரித்து காட்டும் வகையில் சிறந்த பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன் உரிமையாளர் நந்தன் என்கிற ரமேஷ் ஆவார். 

சமூக அக்கறையுள்ள மக்களின் எழுத்துக்களை தங்களது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம் கீற்று இணையத்தளம் உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களை கவர்ந்தது. இதன் பதிவுகள் மக்களின் பிரச்சனைகளை, துயரங்களை எடுத்து சொல்வதாகவும் அதிகாரவர்க்கத்திற்கு சாட்டை அடியாகவும் அமைந்தது. 

கூடங்குளம் அணு மின்நிலையம், முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் படுகொலை, ஈழத்து இன அழிப்பு என்று தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்தும் தொடர்ந்து கீற்று பதிவுகளை வெளியிட்டு வந்தது.  இதை பொறுக்காத இந்திய உளவுத்துறை அரசு பயங்கரவாதிகள் கீற்று உரிமையாளர் ரமேஷ் அவர்களை விசாரணை என்கிற பெயரில் அழைத்து ஒரு மிரட்டலைவிடுத்துள்ளனர். 

நீங்கள எந்த அமைப்பை சார்ந்தவர்? நெடுமாறன், வைகோ, சீமான் போன்றோர்கள் உங்களுக்கு பணம் தந்து உதவுகிறார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். உங்களுக்கு வங்கி கணக்கு உள்ளதா என்றும் கேட்டுள்ளனர். இது மக்கள் பிரச்சனைகளை எழுதும் ஊடகங்களை அச்சுறுத்தும் செயலாகும்.  இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து நியாய உணர்வுள்ள ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும். 

ஜெயலலிதா ஆட்சியில் எழுத்து சுதந்திரம் கூட இல்லையா? இந்திய உளவுத்துறை கயவர்களுக்கு சில கேள்விகள்பயங்கரவாதிகளும், ஊழல்வாதிகளும், கேடிகளும், கிரிமினல்களும் சுதந்திரமாக பேசித்திரியும் பொழுது மக்கள் பிரச்சனைகளை பேசும் ஊடகங்களை மிரட்டுவது ஏனோ? அதிகார வர்க்கத்தின் கைகூலிகள்தான் உளவுத்துறை என்பதை மீண்டும் நிரூபிக்கும் ஒரு செயல் இது ஆகும். இது போன்ற அச்சுறுத்தல்களை வேரறுக்க பதிபவர்கள் ஒன்றிணைந்துசெயல்பட வேண்டும்.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.
thanks to sinthikkavum.net

0 comments:

Post a Comment