எகிப்தில், சமீபத்தில் நடந்த முதற்கட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சி வெற்றி பெற்றிருப்பதாக, அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. எகிப்தில், சமீபத்தில் பார்லிமென்டின் முதற்கட்ட தேர்தல் நடந்தது.
அதில், இஸ்லாமிய பழமைவாதக் கட்சியான, அல் நூர் கட்சி கணிசமான ஓட்டுகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதனால், மேற்கத்திய நாடுகள் மத்தியில் பீதி உருவானது.
இந்நிலையில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் அரசியல் பிரிவான, விடுதலை மற்றும் நீதிக் கட்சி, பாதிக்கு மேல் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. எனினும், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
as
thdipaar.com
0 comments:
Post a Comment