Sunday, December 4, 2011

ஜனநாயக முறையில் இஸ்லாமிய அரசியலை கட்டி எழுப்புவோம் !!!



       ஜனநாயகத்தை உலகிற்கு கற்றுக் கொடுத்த இஸ்லாம். அதனை கண்டு கொள்ளாத இஸ்லாமிய சமுதாயம். இஸ்லாமிய ஜனநாயகத்தை அறிந்த மகாத்தமா காந்தி இந்தியாவில் உமருடைய ஆட்சி போன்ற ஆட்சியை விரும்பினர்.


      ஆதிக்க சக்தியாலும் அதிகார வர்க்கத்தினாலும் இஸ்லாமிய சமுதாயம் ஒடுக்கப்பட்டு இஸ்லாம் என்றால் தீவிரவாதம், இஸ்லாமிய ஆட்சி என்றல் கொடுங்கோல் ஆட்சி என்று அனைத்து மக்களையும் தவறான சிந்தனையில் திசை திருப்ப ஆதிக்க சக்திகளின் கைப்பாவையாக ஊடகங்கள் செயல்பட்டது. இஸ்லாமிய சமுதாயம் செய்வதறியாமல் திகைத்து நின்றது. கமிணிசம் போன்ற கொள்கைகள் ஆதிக்கசக்திளின் கோரப்பிடிலிருந்து தப்பிக்கவில்லை. நாளடைவில் கமிணிசம் தனது கொள்கையையே மாற்றிவிட்டது.


       இஸ்லாத்தை ஜனநாயகம் என்ற போர்வையில் ஆதிக்க சக்திகள் அழிக்க முயல்வதை தடுக்க வழிதெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது இஸ்லாமிய சமுதாயம். இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வந்த காரணத்தால் ஆதிக்க சக்திகள் (இஸ்ரேல், அமெரிக்க மற்றும் அதன் நேசநாடுகள் ) பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளை தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று குறிக்கொண்டு இஸ்லாமிய மக்களை கொன்று குவித்து வருகின்றார்கள். 


      உலகத்தை கட்டிக்காக்கும் ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டுகொண்டிருக்கிறது. அநீதி முஸ்லிம்களுக்கு என்றால் ஐநா கண்டுகொள்வதில்லை. முஸ்லிம்கள் கடல் அலையை போல் இருப்பார்கள் நுரையை போல் கரையில் அடித்து தள்ளப்படுவார்கள் ஹதிசுக்கு ஏற்ப முஸ்லிம் சமுதாயம் பல நாடுகளில் கோடிக்கணக்கில் இருந்தாலும் இஸ்லாத்தை சரியாக விளங்காத காரணத்தினாதினாலும் ஒற்றுமை இன்மைனாலும்  ஆதிக்க சக்திகலின் சுழ்ச்சியில் மாட்டிக்கொண்டு செயிவதரியாமல் தவிர்த்துக் கொண்டிருந்த இஸ்லாமிய சமுதயத்திக்கு ஈரான், துருக்கி, எகிப்து, துனிசியா போன்ற நாடுகள் இஸ்லாமிய வழியில் ஜனநாயகத்தை வழி நடத்த  முடியும் என்பதை உலக சமுதாயத்திற்கு எடுத்து காட்டியுள்ளனர்.


      இதனை கண்டுகொள்ள முடியாமல் அவர்களை தாஜா செய்வது எப்படி என்று ஆலோசனை செய்து கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தில் எந்த ஒரு அநீதி செயலுக்கும் இடம் கிடையாது. இஸ்லாத்திற்கு முன் ஆதிக்க சக்திகள் மண்டியிட்டே ஆகவேண்டும். இஸ்லாமிய எழுர்ச்சி இத்தனை காலம் ஆதிக்கசக்திகளின் கைப்பாவையாக செயல்பட்ட ஊடகங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்ல கூடியவர். அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு குர்ஆனில் உள்ளது என்பதை அறியாதவர் போலும். 



   அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு குர்ஆனில் உள்ளது என்பதை இந்த இஸ்லாமிய சமுதாயம் இனியாவது புரிந்துகொண்ட செயல்படவேண்டும். இஸ்லாத்தை எவராலும் அழிக்கமுடியாது அழிக்க நினைப்பவர்கள் அழிவை சந்தித்தே தீரவேண்டும் . ஜனநாயக முறையில் இஸ்லாமிய அரசியலை கட்டி எழுப்புவோம். 
                                                                                  

                                                                                                         -  சாமானியன் 

0 comments:

Post a Comment