Wednesday, May 9, 2012

தாலிபான் பலம் பெற்றுவிட்டது – அமெரிக்க எம்.பிக்கள்


வாஷிங்டன்:அதிபர் பாரக் ஒபாமாவின் உத்தரவின் பேரில் அதிக படைகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பிய பிறகும் தாலிபான் பலம் பெற்றுவிட்டதாக மூத்த அமெரிக்க காங்கிரஸ் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க செனட்டின் ரகசிய புலனாய்வு குழு தலைவர் டானி ஃபீன்ஸ்டின், பிரதிநிதிகள் சபை ரகசிய புலனாய்வு குழு தலைவர் மைக் ரோகேர்ஸ் ஆகியோர் சி.என்.என்னிற்கு அளித்த நேர்முகத்தில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்த அறிக்கைக்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இருவரும் 2 தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பினர்.
2009-ஆம் ஆண்டின் இறுதியில் 33 அமெரிக்க ராணுவத்தினரை கூடுதலாக ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பினார் ஒபாமா. அதற்கு பிறகும் தாக்குதல்கள் நடைபெற்ற போதிலும் தாலிபானின் பலம் குறைந்துவிட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்க காங்கிரஸிற்கு அளித்த அறிக்கையில் கூறியிருந்தது.
ஆப்கானிஸ்தானில் போராட்டத்திற்கு பாகிஸ்தான் மாணவர்கள் ரிக்ரூட் செய்யப்படுவதாக டெமோக்ரேட் கட்சி உறுப்பினருமான ஃபீன்ஸ்டின் குற்றம் சாட்டினார்.
THANKS TO ASIANANBAN

0 comments:

Post a Comment