Tuesday, May 22, 2012

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம்



ஆந்திரபிரதேசம்: மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம் முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பாக பழைய ஹைதராபாத் மக்களை பயமுறுத்தி பீதிவயப்படுத்தியுள்ளது. ஒரு சில அரசியல், மனித உரிமை இயக்கங்கள் தவிர பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த கோர நிகழ்வை மறந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்தை மட்டும் காவல்துறை குறிவைத்து தொந்தரவு செய்து வருகிறது.
குறிப்பாக 17 அன்று இரவு சோதனை என்ற பெயரில் ஏதோ மறுநாள் காவல்துறைக்கும முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரும் போரே நடந்துவிடப்போகிறது என்ற பாணியில் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையை குவித்துள்ளது. இந்த வருடமும் இந்த நாளில் முஸ்லிம்கள் பகுதிகளில் மட்டும் ஒரு பாதுகாப்பற்ற சூழலை பயத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி அரசு ஒரு மதசார்பற்ற அரசு என்பதை நிருபிக்க மறுபடியும் தவறியுள்ளது.
காவல்துறை ஏற்படுத்திய இந்த பய சூழ்நிலை காரணமாக (Securitarianism) மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுவதற்கே அஞ்சுகின்ற நிலை காணப்படுகிறது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் அநியாயமாக பலியானோருக்கும பாதிக்கப்பட்டோருக்கும தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டுவருகிறது .
எனவே மதபிரிவினைவாத ஹிந்துத்வா சக்திகளுக்கும் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும் பல்வேறு மதசார்பற்ற இயக்கங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் துணையுடன் முஸ்லிம்களை ஜனநாயக வழியில் சட்டரீதியாக ஒருங்கிணைத்து போராட அம்ஜதுல்லா கான் அவர்கள் ஒரு நிகழ்ச்சியை இந்திரா பார்க் தர்ணா சௌக் என்ற இடத்தில் நடத்தினார்கள்.
எனவே சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான அரசாங்கத்தின் இத்தகைய மதபாகுபாட்டை எதிர்க்கவும் காவல்துறை கட்டவிழ்த்துவிடும் கொடுமைகளை கண்டிக்கவும் மதசார்பற்ற இயக்கங்கள் உட்பட அகன்ற ஹைதேராபாத் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்றும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய சிறுபான்மை ஆணையம் பரிந்துரைத்த பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என பாப்புலர் பிரான்ட் கேட்டுக்கொள்கிறது

0 comments:

Post a Comment