Friday, May 4, 2012

ஆப்கான்:ஒபாமாவின் திடீர் விசிட் – தாலிபான்களின் அதிரடி தாக்குதல் !


Obama Makes Surprise Visit To Afghanistanகாபூல்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு திடீர் விசிட்டை மேற்கொண்டார். காபூல் சென்ற ஒபாமா, அதிபர் ஹமீத் கர்ஸாய் உடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்நிலையில் ஒபாமா ஆப்கானை விட்டு வெளியேறிய ஒரு மணிநேரத்தில் 3 இடங்களில் குண்டுவெடித்துள்ளது. ஜலாலாபாத் சாலையில், வெளிநாட்டு ராணுவ மையங்கள் இருக்கும் பகுதியில் கார்குண்டு வெடித்ததாக காபூல்
போலீஸ் தலைவர் அய்யூப் சலாங்கி AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆப்கான் தாலிபான் இத்தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுக்குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹித் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அளித்த செய்தியில், “எங்கள் முஜாஹிதீன்களில் ஒருவர் ராணுவ தளத்திற்கு முன்னால் காரை வெடிக்கச் செய்தார். மீதமுள்ள முஜாஹிதீன்கள் உள்ளே சண்டையிடுகின்றனர். ராணுவத்திற்கு இந்த தாக்குதல் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்று கூறியுள்ளார்.
தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காபூல் முக்கிய விமானநிலையம் அருகே புகை மேலே கிளம்பியதாகவும், இரண்டு பேர் காயமடைந்து, ஒரு பெண்மணிக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டதையும் கண்டதாக AFP ஃபோட்டோக்ராபர் கூறுகிறார்.
thansk to asiananban

0 comments:

Post a Comment