புதுடெல்லி:உடல் நலனை பாதுகாக்கும் மருந்துகளுக்கு விற்பனை அனுமதி வழங்கும் மத்திய அரசின் கொள்கை தாறுமாறாக உள்ளதாக பாராளுமன்ற ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் விவகார பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுகிறது.
சட்டரீதியான சோதனைகளை பூர்த்தியாக்காமல் மாதம் தோறும் ஒன்று என்ற ரீதியில் பெரும் நிறுவனங்களின் 33 மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை அளிக்கபட்டுள்ளதாக நிலைக்குழு கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய வளர்ச்சியடைந்த நாடுகளில் தடைச் செய்யப்பட்ட பல மருந்துகளும் இந்தியாவில் தொடர்ந்து விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.
பிரபல மருந்து நிறுவனங்களான Novartis இன் Everolimus, Cipla இன் Colistimethate, Pharmacia இன் Exemestane, Akums இன் Ademetionine, Eli Lilly இன் Pemetrexid, GlaxoSmithKline இன் Ambrisentan ஆகியனவாகும்.
இந்தியாவில் விற்பனைச் செய்யப்படும் 39 மருந்துகளை பாராளுமன்ற நிலைக்குழு பரிசோதனைச் செய்தபொழுது அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன. இவற்றில் 11 மருந்துகள் கட்டாய லேபரேட்டரி சோதனை நடத்தப்படாமலேயே சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. ஒவ்வொரு மருந்தும் சந்தையில் விற்பனைக்கு வரும் முன் 3 கட்டங்களான பரிசோதனைகளில் கடைசி பரிசோதனை மனிதர்களில் நடத்துவதாகும். இதனை க்ளீனிக்கல் ட்ரயல் என்பார்கள். நாட்டின் 3 அல்லது நான்கு இடங்களில் 100 மனிதர்களிடம் இப்பரிசோதனையை நடத்திய பிறகு அதன் பலனை மதிப்பீடுச்செய்த பிறகே சந்தையில் விற்பனைச்செய்ய அனுமதிக்கவேண்டும் என்பது சட்டமாகும்.
இவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை காணவில்லை என்றும், தடைச் செய்யப்பட்ட மருந்துகளுக்கு அனுமதி வழங்கியது பூரணமற்ற தகவல்களின் அடிப்படையிலாகும் என்றும் பாராளுமன்ற நிலைக்குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளது.
பெரும் மருந்து நிறுவனங்கள் உயர் அதிகாரிகளை அணுகி அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி இத்தகைய மருந்துகளுக்கு அனுமதி வாங்குகின்றனர். மருந்துகளை பரிசோதித்து விற்பனை அனுமதி வழங்கும் மத்திய அரசு நிறுவனமான ட்ரக் கண்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியாவுக்கு(டி.சி.ஜி.ஐ) பல ஆண்டுகளாக தலைவர் இல்லை.
இந்தியாவில் விற்பனைச் செய்யப்படும் மருந்துகளின் பாதுகாப்பு, பலன் ஆகியவற்றை உறுதிச்செய்வது டி.சி.ஜி.ஐக்கு கீழ் செயல்படும் செண்ட்ரல் ட்ரக்ஸ் ஸ்டாண்டர்ட்ஸ் கண்ட்ரோல் ஆர்கனைசேசன்(சி.டி.எஸ்.சி.ஒ) ஆகும்.
மருந்துகளுக்கு விற்பனை அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எடுப்பது இங்குள்ள ஆரோக்கிய நிபுணர்கள் அல்லாத அதிகாரிகள் என்பதும் நிலைக் குழுவுக்கு தெரியவந்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட பல மருந்துகள் தொடர்பான ஆவணங்களும் இவர்கள் வசமில்லை.
சர்ச்சைக்குரிய மருந்துகளான pefloxacin, lomefloxacin, sparfloxacin ஆகிய மருந்துகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களை காணவில்லை என்ற சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விளக்கம் சந்தேகத்திற்குரியது என்று நிலைக்குழு கூறுகிறது.
முன்னர் இத்தகைய மருந்துகளை தடைச்செய்யும் காரியத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு எடுக்கவேண்டும் என்று இதுத்தொடர்பான மனுவின் மீதான விசாரணையில் திங்கள் கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சகம் பதில் அளிக்காவிட்டால் தடைக்கோரி தொடர்புடைய நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு சுதந்திரம் அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
0 comments:
Post a Comment