Monday, February 27, 2012

திருவாரூரில் SDPI யின் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்! 300௦ பேர் கைதாகி விடுதலை .












































SDPI நடத்திய மாபெரும் ரயில் மறியல் போராட்டம் இன்று மதியம் 1.30 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. திருவாரூர், நாகை, தஞ்சை தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த SDPI யின் தொண்டர்கள் அனைவரும் விஜயபுரம் – பள்ளிவாசல் அருகே கூடியிருந்தனர்.
A. அபுபக்கர் சித்திக் தலைமையில் (மாநில செயற்குழு உறுப்பினர்) அனைத்து தொண்டர்களும் கண்டன கோஷங்கள் எழுப்பிவாறு திருவாரூர் ரயில்வே நிலையம் சென்றடைந்தனர்.
காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை தற்போது உள்ள மீட்டர் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்ற அறிவித்த தென்னக ரயில்வே நிர்வாகம் பல வருடங்கள் ஆகியும் இதுவரை அகல ரயில்பாதை அமைக்காததை கண்டித்து கண்டன உரையினை A. அபுபக்கர் சித்திக் அவர்கள் ஆற்றினார்கள்.
கூடியிருந்த காவல் துறையினர் SDPI தொண்டர்களை ரயில்வே நிலையம் உள்ளே விடாதவாறு வெளியே தடுத்து அனைவரையும் கைது செய்து, விஜயபுரம் பி.ஆர்.எம். வாசு நிவாஸ் கல்யாண மண்டபத்தில் அடைந்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட SDPI தொண்டர்களும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தின் முன்னிலையினை M. தப்ரே ஆலம் பாதுஷா – திருவாரூர் மாவட்ட தலைவர், S. அப்துல் அஜிஸ், M. நெய்னா முகமது, வழக்கறிஞர் A.R முகமது பைசல் – திருவாரூர் மாவட்ட வழக்கறிஞர் அணித்தலைவர் மற்றும் பலர் நிகழ்த்தினார்கள்.
நாச்சிக்குளம் – நடுத்தெருவைச்சார்ந்த ஹனீபா அவர்கள் இந்த போராட்டத்தினை பற்றி கூறும் போது, அனைத்து தரப்பு மக்களின் தேவையினை அரசாங்கம் நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அமைந்தது இந்த போராட்டம் என்றார்.
SDPI யின் மாவட்ட ஊடக பொறுப்பாளர் M. ஜெகபர் அலி அவர்களின் கருத்தானது, அகல ரயில்வே பாதை மட்டும் இன்றி மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும், அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பதினை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் அல்லாஹ்வின் உதவியால் இந்த போராட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று கூறினார்.
திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் S. அப்துல் அஜிஸ் அவர்கள் நமது சிறப்பு செய்தியாளரிடம் கூறும் போது, அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் பொருட்டு SDPI யின் இந்த போராட்டம் நியாயமானது, நேர்மையானது, அகல ரயில் பாதை வந்தால் பொது மக்கள் அனைவருக்கும் பயன் அடைய வாய்ப்புள்ளது. தற்போது உள்ள அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு துரித கதியில் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
இறுதியாக, மண்டபத்தில் கூடியிருந்த தொண்டர்களிடம் மாநில
செயற்குழு உறுப்பினர். A. அபு பக்கர் சித்திக் அவர்கள் உரையாற்றும் போது, மத்திய அரசாங்கம் மார்ச் மாதத்திற்குள் காரைக்குடி திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தின் பணியினை உடனே துவங்க வேண்டும் அப்படி இல்லையென்றால் இதனை விட பெரும் போராட்டம் அரசாங்கத்திற்கு ஏதிராக நடைபெறும் என்றார்.
இந்த போராடத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்தது, மற்றும் அனைத்து கட்சியினரும் பாராட்டுதலை அளித்தனர். இப்போராட்டத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை. அரசன், தலைமை கொள்ளை விளக்க பேச்சாளர். பா. தமிழ்ப்பிரியன், மாவட்ட துணை செயலாளர். இரா. பாரதி, ஒன்றிய செயலாளர். ஆறு. ராமச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர். செல்வம், நகரச்செயலாளர். ம. கார்த்திக் போன்றவர்கள் கலந்துக்கொண்டனர்.

0 comments:

Post a Comment