Monday, February 13, 2012

அதிரை அய்யூப்கானின் புதியதலைமுறைகாண குரல்


அதிரையில் பொதுமக்கள்  வைத்திய செலவுக்காக மாதம் 1 கோடி ரூபாய் ஊரை விட்டு வெளியே செல்லும் நிலை உள்ளது. இந்த நிலைமை மாற அதிரையில் பேருந்து நிலையம் அருகில் 24 மணி நேரமும் இயங்ககூடிய தனியார் மருத்துவமனை K.R, அப்போலோ போன்றவைகளுடன் இணைந்து நமது உர் செயல்பட்டால் அதிரை மக்களும் அதனை சுற்றியுள்ள  மக்களும் கிராமவாசிகளும் அனைவருக்கும் குறைந்த செலவில் நலன் பெறுவார்கள். அதிரை இளைங்கர்களுக்கு வேலை வைப்பு கிடைக்கும். விட்டில் பொருளாதாரம் மேன்மைபெறும். அதனை சுற்றி உள்ள கடைகளில் வியாபாரம் பெருகும். இந்த மாபெரும் பெரிய மருத்துவமனையை யாரெல்லாம் சேர்ந்து உருவாக்குகிறார்களோ அவர்களை பல தலைமுறைகளும் நெஞ்சார வாழ்த்தும்.
 
அதிரையில் அணைத்து மக்களும் மகிழ்ச்சி பெற முயற்சி எடுத்தால் வெற்றி பெறலாம் நிச்சயம். அதிரையில் முந்திய காலங்களில் பதவியில் உள்ள சேர்மன்கள் அதிரையில் பல நல்ல திட்டங்களை உருவாக்கியுள்ளார்கள். இப்போது 45 ஆண்டிற்கு பிறகு 2011 இல்  நடுத்தெரு ஜனாப் அஸ்லாம் அவர்கள் சேர்மன் பதவிக்கு வந்துள்ளார்கள். சவுதி அரேபிய ( AYDA ) அய்டா புதிய சேர்மன் ஜனாப்  அஸ்லாம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஊரில் உள்ள பல குறைகளை தெரிவித்து அதிரை பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் நமது ஊருக்கு நவீனமும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

1 ) அதிரை நகருக்கு பேர் சொல்லும் பேருந்து நிலையம் தற்போது சுகாதாரம் இன்றி காணப்படும் நிலை உள்ளது. பேருந்து நிலையத்தை நவீனபடுத்த முயற்சி செய்யவேண்டும்.

2 ) அதிரையில் காலம் காலமாக திடீர் திடீர் என்று தீ பிடிக்கும் சம்பவம் நடக்கிறது. இந்த நிலைமையை போக்க அதிரையில் கால்நடை மருத்துவனை அருகில் தீயணைப்பு நிலையம் விரைவில் அமைக்க முயற்சி செய்ய வேண்டும்.

3 ) அணைத்து வீடுகளிலும் குப்பைகளை அகற்றும் முறைகளை கற்று கொடுக்க வேண்டும். வீடுகளில் பிளாஸ்டிக் வாளிகளை வைத்து அதில் குப்பைகளை சேர்த்து எங்கு குப்பை தொட்டி அமைந்துல்லதோ அங்கு போய் குப்பைகளை கொட்ட வேண்டும். இவ்வாறு அனைவரும் கடைபிடித்தால் நமது பகுதி சுத்தமாக இருக்கும். அதே நேரத்தில் நமது பகுதி தொற்று நோய் பரவாத பகுதியாக அமையும். நோயின்றி வாழ வகை செய்ய வேண்டும்.
4 ) அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் வாய்கால்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து அந்த கழிவுகள் உடனடியாக அப்புறபடுத்த வேண்டும். புதிதாக உருவாக்கிய தெருக்களில் அவசர கழிவுநீர் திட்டதை உருவாக்க வேண்டும். எல்லா தெருக்களில் உள்ள கழிவுநீர் குட்டைகளை சீரமைக்க வேண்டும்.

5 ) எல்லா தெருகளிலும் உள்ள வீணான செடிகளை அகற்றி தெருக்களை சுத்தமாக வைக்க வேண்டும். இரவில் கொசு தொல்லையால் அரிப்பு மற்றும் தொற்றுநோய்கள் உருவாகி பல மக்கள் அவதிப்படும் நிலைமை  இருக்கிறது. இதனை போகக் 15 நாட்களுக்கு ஒரு முறை கொசு மருந்து, பூச்சி மருந்து அடிக்க வேண்டும்.

6 ) நடுத்தெரு அரசு பள்ளிக்கூடம் அருகில் செட்டியாகுளம் நீண்ட காலமாக சுகாதரமின்றி காணப்படுகிறது  இந்த குளத்தை மேடுபடுத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு திடல் அமைக்க முயற்சிக்கவேண்டும்.

7 ) சேர்மன்வாடி அருகில் யானையன் குளம் நீண்டகாலமாக சுகாதாரமின்றி காணப்படுகிறது இதன் அருகில் அரசு பெரிய மருத்துவமனை அமைந்து உள்ளது. இந்த குளத்தை மேடுபடுத்தி 20 கும் மேற்பட்ட கடைகள் ( மீன் , இறைச்சி , கோழி , மற்றும் சமையல் சாமான்கள்  போன்றவை  ) பேரூராட்சி மூலம் அமைத்தால் பேரூராட்சிக்கு நல்ல வருமானமும் இந்த பகுதி முஸ்லிம், ஹிந்து, கிருஸ்தவ மக்களுக்கு வாதியாக அமையும்.

நன்றி : அதிரை உங்கள் அன்பு சகோதரன் அய்யூப்கான் நடுத்தெரு.
 

0 comments:

Post a Comment