சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து முதல்வர் ஜெயலலிதா சொல்லியுள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மையாகும். இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி போட காத்திருக்கும் பாஜகவின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,விஜயகாந்த் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
கூட்டணி இல்லை என்றால் தேமுதிக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சட்டப் பேரவைக்குள் போயிருக்க முடியாது. இப்போதுதான் ஒரு கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது கூட்டணி சம்பந்தமாக கருத்து சொல்கிறேன்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கண்டிப்பாக பாஜக போட்டியிடும் என்றார் அவர்.
thanks to asiananban.blogspot.com
0 comments:
Post a Comment