Thursday, February 16, 2012

ஆர்.எஸ்.எஸ்ஸை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – திக் விஜய்சிங்


digvijay
லக்னோ:ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். ஆனால், அந்த அமைப்பிற்கு 150-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் இருப்பதால் தடைச் செய்வது இயலாத காரியம் என்று அவர் தெரிவித்தார். 68 பேர் பலியாக காரணமான 2007 சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான
கமால் சவுகான் என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதியை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்தனர். இக்கைது குறித்து காங்.பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறியது:
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முன்னர் இருந்தவன் என, தெரியவந்துள்ளது. அதனால், அந்த அமைப்பை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்வது என்பது இயலாத ஒன்று. ஏனெனில், அது 150க்கும் மேற்பட்ட அமைப்புகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, தீவிரமாகக் கண்காணிப்பது தான் அவசியம்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிமாக இருந்திருந்தால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் நடவடிக்கையே வேறு மாதிரியாக இருந்திருக்கும். கைதான சவுகான், முன்னர் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளான். அதனால், உ.பி., தேர்தலை கருத்தில் கொண்டே, அவன் கைது செய்யப்பட்டான் என்று சொல்வது தவறு என்று திக்விஜய் கூறினார்.
thanks to asiananban.blogspot.com

0 comments:

Post a Comment