Saturday, February 18, 2012

சென்னையில் பைப் வெடிக்குண்டுகள் பறிமுதல்: ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் சதியா?


சென்னை: சென்னை அருகே செங்குன்றத்தையடுத்துள்ள எடப்பாளையத்தில் உள்ள ஒரு கிணற்றில் 5 பைப் வெடிகுண்டுகள் கைபற்றப்பட்டன. இதையடுத்து கிணற்றின் உரிமையாளர் கோயில்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பைப் வெடிக்குண்டுகள்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்டது எடப்பாளையம். அங்குள்ள பசும்பொன் நகரில் கோயில்ராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சக்திவாயந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக சோழாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட கிணற்றுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கிணற்றில் 5 பைப் வெடிகுண்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர்.

இதுகுறித்து கிணற்றின் உரிமையாளர் கோயில் ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிணற்றுக்குள் இருந்து சக்திவாய்ந்த பைப் வெடிக்குண்டுகள் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பா.ஜ.க தலைவர் அத்வானி ஜனசேதனா யாத்திரை செல்லும் வழியில் பைப் குண்டு கைப்பற்றப்பட்டது. அப்பாவி முஸ்லிம்களின் பழியை போட்டு போலீசார் கைது செய்தனர். ஆனால், தற்பொழுது கோயில்ராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து பைப் வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை போலீஸார் முஸ்லிம்கள் மீது பழி போடுவார்களா?அல்லது வழக்கை மூடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கலவரத்தை தூண்ட சங்க்பரிவார தீவிரவாதிகள் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். அண்மையில் சில சம்பவங்களில் சங்க்பரிவார தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏதேனும் நாசவேலைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மீது பழியை போட பைப் வெடிக்குண்டுகளை சங்க்பரிவார ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பதுக்கி வைத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தவேண்டும். முன்னர் தென்காசியில் நடந்த அனுபவத்தை போலீசார் மறந்து இருக்கமாட்டார்கள்.

நன்றி: தூதுஆன்லைன்

0 comments:

Post a Comment