Wednesday, February 22, 2012

ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்படும் – ஈரான் அறிவிப்பு !


Oil price climbs on fear Iran may stop more oil
டெஹ்ரான்:பகைமை கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்தால் ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஸ்பெயின், நெதர்லாந்து,க்ரீஸ், ஜெர்மனி,இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த ஆலோசித்து வருவதாக ஈரானின் எண்ணெய்
துறை இணை அமைச்சர் அஹ்மத் கலபானி கூறியுள்ளார்.
தடை நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் இந்த நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்படும்.
‘எங்களின் நடவடிக்கை எதிர்காலத்தில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 150 டாலரை எட்ட காரணமாகும்’ என்று ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் எம்.டியுமான கலபானி கூறியுள்ளார்.
பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் எண்ணெய் வழங்குவதில்லை என்று ஈரான் முன்னரே அறிவித்திருந்தது. ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இவ்வருடம் ஜூலையில் நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ள நிலையில் ஈரான் தனது நடவடிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
திங்கள் கிழமை ஈரானின் அறிவிப்பிற்கு பிறகு ஆசிய எண்ணெய் வியாபார விலை ஒன்பது மாதங்களிடையே மிகவும் உயர்ந்து காணப்பட்டது. பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் ஐரோப்பாவிற்கு ஈரானின் அறிவிப்பு பலத்த அடியாக கருதப்படுகிறது.
thanks to asiananban.blogspot.com

0 comments:

Post a Comment