Wednesday, February 29, 2012

போலீஸ் விளையாட்டு!



வேளச்சேரி என்கவுன்டர் தொடர்பாக பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையில், 'ஐந்து பேரையும் கொன்று தீர்க்கும் நோக்குடன்தான் காவல்படை சென்றுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய பேராசிரியர் அ.மார்க்ஸ், ''கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளவுக்குரிய குற்றத்தை செய்திருந்தால் மட்டுமே, அவரைக் கொல்லலாம் என்று, இந்திய தண்டனைச் சட்டம் 46 தெளிவாகச் சொல்கிறது. போலீஸ் சொல்லும் கதைப்படி பார்த்தால், அன்றைய நிலையில் அவர்கள் சந்தேகத்துக்குரிய நபர்களே. இதுகுறித்து கமிஷனர் திரிபாதியிடம் கேட்டால், 'எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால், தற்காத்துக் கொள்ள எங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது’ என்று கோபப்படுகிறார். நாங்கள் என்கவுன்டர் நடந்த பகுதிக்குச் சென்றபோது, முதலில் அந்தப் பகுதி மக்கள் எங்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி பேசினார்கள். ஆனால், திடீரென அங்கு வந்த சிலர் போலீஸை வானளாவப் புகழ்ந்து பேசி, எங்களை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்தனர். என்கவுன்டர் கொலையைப் பாராட்டி ஆங்காங்கே திடீர் போஸ்டர்கள் முளைத்துள்ளன. இவை அனைத்தும் போலீஸின் கண்ணசைவுப்படியே நடக்கின்றன'' என்று சீறினார்

0 comments:

Post a Comment