2
அஹமதாபாத்: "நரோடா பாட்டியா" கடந்த 2002 ஆம் ஆண்டு சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம். அப்பாவி முஸ்லிம்களில் பெண்கள் குழந்தைகள் என 90ற்கும் மேற்பட்டவர்கள் சங்கப்பரிவாரங்களால் காட்டுமிராண்டித்தனமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அதே சமயம் இவ்வூரில் தனது அக்கம்பக்கத்தினராக இருந்த இந்துக்களுக்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய வீட்டை சீரமைப்பதற்கு முஸ்லிம்களே உதவிசெய்துள்ளனர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி (ஐ.ஆர்.சி) மூலமாக 70ற்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. அதிக முஸ்லிம்கள் அந்த பகுதியை விட்டு சென்றுவிட்டனர். கலவரத்தின் போது வெளியேறிய பெரும்பாலான இந்துக்கள் மீண்டும் தங்களுடைய இருப்பிடத்திற்கு வந்துவிட்டனர்.
வத்வா, துதேஷ்வர் போன்ற பகுதிகளில் இதுவரை 500ற்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களுக்கு இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி உதவி செய்துள்ளது. பல மாதங்களுக்கு பிறகு முஸ்லிம்கள் தங்களது இந்து நண்பர்களை கண்டு கொண்டார்கள்.
லதா செளத்ரி (வயது 40) என்ற பெண்மணி கூறும்போது தானும் தன்னுடைய குடும்பத்தினரும் கலவரத்தின் போது நரோடா பாட்டியாவிலிருந்து கோக்கரா என்னும் இடத்திற்கு சென்றுவிட்டதாக கூறினார். ஆனால் சில மாதங்கள் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தங்கள் வீடு கலவரக்காரர்களால் சூரையாடபட்டதாக கூறினார்.
ஹன்ஸா திவாரி (வயது 50) என்ற பெண்மணி கூறும்போது: நரோடா பாட்டியாவில் முஸ்லிம்களின் வீட்டை கலவரக்காரர்கள் தீ வைத்து கொழுத்திய போது தனது வீடும் அதில் பாதிக்கப்பட்டதாக கூறினார். இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி தனது வீட்டை சீரமைத்து கொடுத்த பின்பு தாங்கள் சந்தோஷமாக வீடு திரும்பியதாக கூறினார். எங்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நல்லுறவு இருந்து வருகிறது. இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி செய்த உதவியினால் தான் எங்களால் வீடு திரும்ப முடிந்தது எனக்கூறினார்.
ராதேஷ் ஷியாம் ஷர்மா (வயது 45) என்கிற டெய்லர் கூறும்போது: நான் பிறந்ததிலிருந்தே நரோடா பாட்டியாவில் தான் வசித்து வருகிறேன். எங்களுக்கு முஸ்லிம்களுக்குமிடையே நல்ல புரிந்துணர்வு இருந்து வருகிறது. ஐ.ஆர்.சி தான் எங்களுக்கு உதவி செய்து எங்களுடைய வீட்டை சரி செய்து கொடுத்தது எனக்கூறினார்.
ஐ.ஆர்.சியின் தலைவர் ஷகீல் அஹமது அன்ஸாரி கூறும்போது: இவர்கள் அனைவரும் சாதாரண இந்துக்கள். இவர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபடவில்லை. இவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வராத நிலையில் நாங்கள் உதவி செய்ய தீர்மானித்து, அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்தோம் என்று கூறினார்.

thanks to chennaipfi
0 comments:
Post a Comment