Sunday, February 5, 2012

எந்தத் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயார் ?



 ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என தான் நம்புவதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா கூறியுள்ளார். இதையடுத்து எந்தத் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக, ஈரான் நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.


அமெரிக்காவில் இருந்து வெளியாகும், "தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இந்தாண்டு, ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த பனெட்டா,"இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என இஸ்ரேல் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது. அதுகுறித்த அமெரிக்காவின் கவலையைத் தான் நான் வெளியிட்டுள்ளேன்' என்றார். இந்நிலையில், நேற்று ஈரான் மக்கள் மத்தியில் உரையாற்றிய அந்நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி,"ஈரானை மிரட்டுவதோ, தாக்குவதோ அமெரிக்காவுக்கு அபாயமாகத் தான் விடியும். பொருளாதாரத் தடைகளால் ஈரானின் அணுசக்தி முன்னேற்றத்தை தடுக்க முடியாது. பொருளாதாரத் தடைகள் மற்றும் போர் ஆகிய மிரட்டல்களுக்கு பதிலடியாக நாங்களும் எங்கள் பாணியில் மிரட்டலை அமல்படுத்த வேண்டி வரும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
thanks to gnanamuthu.com

0 comments:

Post a Comment