Monday, February 13, 2012

மாபெரும் எழுச்சிச் சூறாவளி!...எதிர்பாருங்கள்!..


நவீன ஈரானுக்கு... 

ஒரு மிகப்பெரும் எழுச்சி சூறாவளி உருவாகிக்கொண்டு இருக்கிறது. இந்த சூறாவளி ஏகாதிபத்தியத்தையும், அடக்குமுறைகளையும் வேரோடு பிடுங்கி எறியும்.’ 

பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய  அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார்.‘மார்க்சிஸமும், முதலாளித்துவமும் மனித வரலாற்றில் மிகவும் சர்வாதிகார தன்மைகொண்ட ஆட்சி முறைகளாகும். மார்க்ஸிசம் முடிந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடித்தளம் ஆட்டம் காணும் சப்தம் உலகம் முழுவதும் கேட்கிறது’ – எனவும் நஜாத் கூறினார்.

அணுசக்தி தொடர்பாக ஈரான் எடுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை காணப்போகிறீர்கள் என்று கூறிய அவர் மேலை நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடி பணியாது   மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் – அமெரிக்காவின் அச்சுறுத்தல் செல்லாக்காசு விவகாரம் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் அவர் கூறும்போது பொருளாதார தடைகளை விதித்து, தாக்குதல் அச்சுறுத்தல்களை காட்டி மேலை நாடுகள் நாடகமாடுகின்றன. ஒரு பக்க நீதிக்கே எல்லோரும் தலை சாய்க்க வேண்டுமென கருதுகிறார்கள். ஆனால் அணு சக்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதை மதித்து நடக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உலக நாடுகளுக்கு இருக்கிறது. அதைவிடுத்து பயமுறுத்தலில் குதிக்கக் கூடாது.

மேலை நாடுகள் உலகத்தை காலனித்துவ நாடுகளாக வைத்திருக்க விரும்புகின்றன. இஸ்ரேலிய மோசாட்டுடன் சேர்ந்து சுதந்திரமற்ற உலகத்தை உருவாக்க இவர்கள் ஆசைப்படுகிறார்கள். அது வெறும் பகல் கனவாகும் . மானிடப் படுகொலைகளை செய்யும் மேலை நாடுகளிடமிருந்து உலகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு நவீன ஈரானுக்கு இருக்கிறதென்று ஆயிரக்கணக்கான மக்களிடையே பேசும்போது அவர் தெரிவித்தார். 
thanks qahtaninfo.blogspot.com

0 comments:

Post a Comment