Tuesday, February 7, 2012

தமிழக மக்களே உஷாராக இருங்கள்!

இது தமிழக மக்களை மிரட்டுவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல, மாறாக இன்றைய காலச்சூழ்நிலைகளை உண்ணிப்பாக கவனித்து, இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கிய பின்னர் தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சிறு கட்டுரை.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழக மக்களின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் இந்திய வரலாற்றிலிருந்து விலக்கி வைத்து விட முடியாது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஜாதி, மத பேதமின்றி தேசத்தின் சுதந்திரத்திற்காய் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளாம். கான் சாஹிப் (மருதநாயகம்), கட்டபொம்மன், வ.ஊ. சிதம்பரனார், மருது சகோதரர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதே போன்று தமிழகத்தை மிகப்பெரும் சக்தியாக மாற்றிய அமைத்த பெருமை தந்தை பெரியாருக்கும் உண்டு. தீண்டாமைக்கொள்கையை தகர்த்தெரிய, பார்ப்பணிய மத வெறியை மாய்ப்பதற்கு தமிழக மக்களை மடமைத்தனத்திலிருந்து விடுவிக்க அறும்பாடுபட்டவர் தந்தை பெரியாராவார்.



திராவிடக்கழகம் உருவாக்கப்பட்டு தமிழகத்தில் வேரூன்றி இருந்தகாலத்தில் பார்ப்பண வெறியர்களால் தங்களது ஆரியக்கொள்கையை தமிழகத்தில் தடம் பதிக்க முடியாமல் தவித்தனர். தந்தை பெரியார் காலத்தின் போதும் சரி அதன் பின்னர் திராவிடக்கட்சிகள் உருவாக்கப்பட்ட பின்பும் சரி ஆரியர்களால் பெரிய அளவில் தமிழகத்தில் கால் பதிக்க இயலவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக்காட்டிலும் அதிக அளவில் மதக்கலவரங்களோ, குண்டுவெடிப்புகளோ, தீவிரவாத தாக்குதல்களோ நடைபெற்றதில்லை. இதற்கான காரணத்தை உற்று கவனிக்கும் போது  ஃபாசிஸ பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் தமிழகத்தில் குறைந்து காணப்படுவதால் தான் என்று தெளிவாக புலப்படுகிறது.

தமிழக வரலாற்றில் ஒரு சில இடங்களில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை காணும் போது தேச விரோதிகளான சங்கப்பரிவார கும்பல்களின் கைவரிசை தான் அதில் பதிந்து இருக்கிறது. மண்டைக்காடு கலவரமாகட்டும், கோயமுத்தூர் கலவரமாகட்டு, தென்காசி குண்டுவெடிப்பு சம்பவமாகட்டு இவை அனைத்திலுமே சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளின் ஈடுபாடுகள் இருந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி, பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி போன்றவர்கள் தமிழகத்தில் செல்லா காசாகிப்போயிருந்தாலும் தமிழகத்தில் தங்களது பாதங்களை பதிப்பதே அவர்களுக்கு பெரும் சவலாக இருந்தது. அதற்கான கால அவகாசம் தற்போது அவர்களுக்கு கிட்டியுள்ளதோ என்று எண்ணும் அளவிற்கு தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. சமீபத்தில் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை வைத்தும், ஜெயலலிதா பதவியேற்பு விழாவின் போது சம்பந்தமே இல்லாமல் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை வரவழைத்ததும், ஃபாசிஸ சிந்தனை கொண்ட பிராமண வெறியனான "துக்ளக்" சோவிற்கு தலையாட்டுவதை பார்க்கும்போது ஃபாசிஸ பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் கால்பதிக்க அவகாசத்தை முதல்வர் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவே தோன்றுகிறது.

தற்போது இந்த ஐந்து வருடகாலகட்டத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் மிகப்பெரும் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருப்பது தெரியவருகிறது. குமரி மாவட்டத்தில் சீருடை அணிந்து 25,000 உறுப்பினர்கள் என மொத்தம் 1 லட்சம் பேர் கூடுகின்ற "ப்ராந்த சாங்கிக்" என்னும் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது  ஆர்.எஸ்.எஸ். இதற்கு அவர்களின் சர்சங்சாலக்கான மோகன் பகவத் பங்கேற்க இருக்கிறாராம். இவை அனைத்தையும் பார்க்கும்போது ஜெயலலிதா ஆட்சி செய்ய இருக்கும் இந்த ஐந்து வருடக்காலத்தை இறுதி அவகாசமாக ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் தமிகத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களை நாம் அனுமதித்தால் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் அமைதியின்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே உஷாராக இருந்து கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.
THANKS TO PUTHIYATHOOTHU.BLOGSPOT.COM

2 comments: