Wednesday, February 22, 2012

“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!!




கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தென்னூர் எவர்கிரீன் துவக்கப்பள்ளியில் மாநிலத்தலைவர் முஹம்மது ஷாஃபி தலைமையில் நடைபெற்றது.“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!! ” என்ற முழக்கத்துடன் சரியாக பகல் 02:30 மணியளவில் மாநில பிரதிநிதிகள் மாநாடு இனிதே துவங்கியது. மாநில செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார்.பின்னர் மாநில பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2012-2013 ஆண்டிற்கான புதிய மாநில நிர்வாகிகளை தேசிய செயலாளர் மெஹஃபூஸ் அறிவித்தார்.





 
மாநில தலைவர்:

முகம்மது தம்பி (அதிராம்பட்டினம்)

மாநில துணைத் தலைவர்: சாகுல் சஹீத் (ராம்னாடு)

மாநில பொதுச் செயலாளர்: சத்தார் (திருச்சி)

மாநில செயலாளர்: அராபாத் (திருநெல்வேலி)
                       

மாநில பொருளாளர்:முஹைதீன் (தஞ்சை)

மாநில செயற்குழு உறுப்பினர்கள்:


1. ராஜா முஹம்மது (மதுரை)

2. ஜமிஷா (மேட்டுப்பாளையம்)

3. அப்துல்லாஹ் (சென்னை)

4. பக்ருதீன் (மதுரை)

5. ஹனீப் (கோவை)

6. அப்துர் ரஹ்மான் (காயல்பட்டினம்)



புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் முகம்மது தம்பி அவர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினராக திருச்சிM.I.E.T. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர் P.M.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு வலிமையான எதிர்கால இந்தியாவை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் மாணவ சமூகத்தையே சாரும் என உரையற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI - ன் தமிழக மாநில பொது செயலாளர் ரஃபீக் அஹமத், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில செயலாளர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் கர்நாடகா மாநில செயலாளர் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, கீழ்கண்ட மாநாட்டுத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்ட தலைவர் ஃபக்ருதீன் அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் காலாண்டு இதழான 'கேம்பஸ் டுடே' யை கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தேசிய செயலாளர் மெஹஃபுஸ் வெளியிட்டார்.
தீர்மானம்

1.    இன்றைய கல்வி நிறுவனங்கள் சேவை மனப்பான்மையிலிருந்து விலகி, கொள்ளை லாபம் ஈட்டும் வியாபார நிறுவனங்களக  மாறி இருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு, உயர்கல்வி வரை இலவசமாக வழங்க கோரியும், கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கை முன்பதிவு மற்றும் கல்விக் கொள்ளையினை தடுத்து நிறுத்தும்படியான சட்டம் இயற்றுவதோடு, அனைத்து அரசு கல்வி நிறுவனங்களின் தரத்தினை உயர்த்த வேண்டும் எனவும் இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 2.    நம் சமூகத்தின் நாளைய தலைவர்களான மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை கருத்தில் கொண்டு அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, கல்வி வளாகங்களில் 100 மீட்டருக்கு உட்பட்டு இருக்கும் மது மற்றும் புகையிலை விற்பதற்கான தடையை 500 மீட்டராக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்துகிறது.
 3.   கல்வி வளாகங்களில் கட்டுப்பாடு எனும் பெயரில் மாணவர்களுக்கு மத்தியில் அவர்களது மத சுதந்திரத்தை பறிப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவன்மையாக கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் அரசை வலியுறுத்துகிறது.
 4.    பள்ளி, கல்லுரிகளில் மாணவியர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளும், மன உளைச்சலால் பெருகிவரும் மரணங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 5. சமூகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை களையும்விதமாக அனைத்து சமூக மக்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் தகுந்த இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையின் பரிந்துறைப் படி சிறுபான்மையினருக்கான 15% இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 6.    பள்ளி, கல்லூரிகளின் துவக்க மற்றும் நிறைவு நேரங்களில் பேருந்தின் கூட்ட நெரிசலால் படிகளில் செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாவதை அரசு கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கென இலவச மற்றும் மாணவ தனி பேருந்தினை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறது.
 7.    மாணவர்களுக்கு இடையே ஒற்றுமை, சமூக மற்றும் தெளிந்த அரசியல் சிந்தனையை உருவாக்கிட கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடத்துவதன் மூலம், கல்லூரி வளாங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அரசினை வலியுறுத்துகிறது.
 8.    பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதித் தேர்வுகள் நெருங்கும் வேளையில், அறிவிக்கப்பட்ட 8 மணி நேர மின்வெட்டும், திடீர் மின்வெட்டுக்களும் மிகுந்த சிரமத்தை ஏற்ப்டுத்துகிறது. இந்நிலையை களைய விரைவு நடவடிக்கைகள் வேண்டுமெனவும், குறந்தபட்சமாக, இறுதித் தேர்வுகள் முடியும் வரை முற்றிலும் மின்வெட்டுக்கள் நீக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதோடு, அமல்படுத்த இருக்கும் மின் கட்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 9.    உயிருக்கு உலைவைக்கும் அணுஉலைகளை உலகின் பல்வேறு நாடுகள் மூடிவரும் நிலையில், மின் உற்பத்திக்கு நம் தேசத்தில் பல்வேறு வழிமுறைகள் இருந்தும் அதனை விரிவுபடுத்தாமல், திறக்க இருக்கும் கூடங்குளம் அணுஉலையை மக்கள் நலன் கருதி நிரந்தரமாக மூடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 10.                        அத்துமீறும் அதிகாரமளிக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம், மனித உரிமைகளுக்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற மனித உரிமைகளை மாய்க்கும், ஜனநாயகத்திற்கெதிரான கறுப்புச் சட்டங்கள் திரும்பப்பெற வேண்டுமெனவும், தீவிரவாத முத்திரை குத்துப்பட்டு போலி எண்கவுண்டருக்கு உள்ளாக்கப்படும் அவலங்களும் மாய்க்கப்பட்டு, குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியிறுத்துகிறது.
 11.                        உலகின் கள்ள நாடும், எல்லை ஆக்கிரமிப்பு  நாடுமான இஸ்ரேல், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தினையும், குண்டு வெடிப்பு கலாச்சாரத்தினையும், விதைத்துவரும்  நிலையில் இஸ்ரேலுடனான இந்திய இராஜ்ஜிய உறவுகள் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசினை வலியுறுத்துகிறது.
 12.   அரசு  மற்றும்  அரசு  உதவி பெறும் கல்வி  நிறுவனங்களில் போதிய உள்கட்டமைப்புவசதியின்மையால் அதில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலையும் பாதுகாப்பு நிலையும்அபாயகர நிலையில் உள்ளதுமாநாடு நடைபெற்று கொண்டிருக்கும் திருச்சி தென்னூர் குத்பிஷாநகரில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற அளவிற்கு பள்ளியின் கூரை மிகவும்மோசமாக பழுதடைந்துள்ளதுபள்ளியின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு சமூக விரோதிகள் இரவுநேரங்களில் பயன்படுத்தும் சட்ட விரோத கூடாரமாக மாறிவருகிறதுனவே மேற்கண்ட பள்ளிக்கூடம் உட்பட அனைத்து பள்ளிக்கூடம் மீதும் தமிழக அரசும்மாநகராட்சி நிர்வாகமும் தக்கநடவடிக்கை எடுத்து உள்கட்டமைப்புகளை குறுகிய காலத்தில் சீரமைக்க வேண்டுமெனகேட்டுகொள்கிறது.
 13.  கேம்பஸ் ஃப்ரண்டின் நடப்பாண்டிற்கான வளர்ச்சி நிதியை அளித்து, பணிகள் மேம்பட உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இம்மாநாட்டின் மூலம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
thanks to cfi

0 comments:

Post a Comment