Saturday, February 18, 2012

விடுதலையாகி வெளியே வந்தும் பயத்தின் கோரப்பிடியில் ஆமிர் !



19 வயதில் பொய்யான குற்றச்சாட்டில் கைதாகி, 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம் அனுபவித்து, பிறகு அனைத்து வழக்கிலிருந்தும் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டு, ஒரு மாதம் கடந்தும் பீதி அகலாத நிலையிலேயே காணப்படுகிறார் ஆமிர்.

1997ம் ஆண்டு மருந்து வாங்க கடை வீதிக்கு சென்றிருந்த போது, ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, பிறகு குண்டு வெடிப்பு உள்ளிட்ட 19 பொய்யான, ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சேர்க்கப்பட்டு, கடும் சித்திரவதைக்கு உள்ளானார் ஆமிர். தற்போது 17 வழக்குகளிலிருந்து, நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.    விடுதலையாகி ஒரு மாதமாகியும், அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. காரணம் அவர் கைதான அந்த சூழலில் அவருக்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்த, தந்தை தற்போது உயிரோடில்லை.  தாயும் புத்தி பேதளித்தவராக, அரைப்பைத்தியமாக உள்ளார்.  ஆமிர், தனது வாலிபத்தை சிறையில் கழித்து விட்டு தற்போது விடுதலையாகி, வீடு திரும்பியும் வேதனையின் விளிம்பில் தான் இருக்கிறார். எங்கே தன்னை மீண்டும் கைது செய்து விடுவார்களோ, என்று அஞ்சியவராக வெளியே செல்லவும் பயப்படுகிறார்.  ஆமிர் செய்த ஒரே தவறு, அவர் கடந்த 1997 டிசம்பர் மாதம், அவரது உடன் பிறந்த சகோதரியை காண, முதன் முதலாக ஒரு மாத விசாவில் பாகிஸ்தான் சென்றது தான், பிறகு மேலும் ஒரு மாதம் முறையான விசா நீடிப்பு பெற்று, 1998 பிப்ரவரியில், இந்தியா திரும்பிய அவர் மீது "லஷ்கர் தய்யிபா" பட்டம் சுமத்தி வழக்கு ஜோடிக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்ன வென்றால், அவர் 1997 டிசம்பரில் தான் முதன் முதலாக பாகிஸ்தான் சென்றார், ஆனால் அதற்கு 9 மாதங்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பில் இவரை சேர்த்து, அதுவும் "லஷ்கர்" அமைப்பு பயிற்சி பெற்றவர் என்ற குற்றச்சாட்டும் பதிவு செய்தனர்.  .....என்னே வினோதம்! எத்தனை சோகம்!!   எப்போது முடிவுக்கு வரும் இந்த கேவலம்???
நன்றி மறுப்பு 

0 comments:

Post a Comment