Sunday, February 5, 2012

இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு ஈரான் உதவும் – காம்னஈ



Iranian supreme leader Ayatollah Ali Khamenei
டெஹ்ரான்:உலகின் புற்றுநோயான இஸ்ரேலை எதிர்க்கும் எந்த நாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் ஈரானின் உதவி கிடைக்கும் என ஈரானின் ஆன்மீக உயர்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.
1979-ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியின் நினைவு தினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

இஸ்ரேலுக்கு எதிராக போராடும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்விற்கும், ஃபலஸ்தீனின் ஹமாஸிற்கும் ஈரான் உதவியுள்ளது. இனி எவரேனும், இஸ்ரேலை எதிர்க்க களமிறங்கினால் அவர்களுக்கும் ஈரான் உதவும். இஸ்ரேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு. அதனை வெட்டி எறியவேண்டும் என காம்னஈ கூறினார்.
மேலும் அவர் கூறியது:
அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிடுகிறது என குற்றம் சாட்டுவது சரியல்ல. ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறித்து தெளிவான கொள்கை இல்லாத அமெரிக்கா அச்சுறுத்துவது, அவர்களின் தோல்வியை காண்பிக்கிறது.
ஈரானின் கச்சா எண்ணெய்க்கு தடை ஏற்படுத்துவதும், தாக்குதல் மிரட்டல் விடுப்பதும் அமெரிக்காவிற்கு பத்து மடங்கு இழப்பை உருவாக்கும். அணு சக்தி திட்டத்தில் எங்களின் நிலைப்பாட்டை மாற்ற தடைகள் மூலம் முடியாது. உரிய நேரத்தில் மேற்கத்தியர்களுக்கு எதிராக ஈரான் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும். தடை ஈரானுக்கு தன்னிறைவை அதிகரிக்கச் செய்யும். ஈரானை தாக்கினால் வேதனையான விளைவுகள் அமெரிக்காவிற்கு ஏற்படும். உங்களின் தடையின் தீவிரத்தை பொறுத்து ஈரானுக்கு தன்னிறைவு ஏற்படும். ராணுவ துறையின் மீது தடை விதித்து இருக்காவிட்டால் ஈரான் ராணுவ ரீதியாக முன்னேற்றத்தை அடைந்து இருக்க இயலாது. இவ்வாறு காம்னஈ கூறினார்.
ஏப்ரல் துவக்கத்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பெனேட்டா நம்புவதாக சில ஆவணங்களை மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காம்னஈ ஈரானின் முடிவை வெளியிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment