கீழக்கரையில் மின் வெட்டு கண்டித்து ஆர்ப்பாட்டம்
கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே இன்று காலை 11 மணியளவில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவி வரும் சூழ்நிலையில் கீழக்கரை நாளொன்றுக்கு காலையில்,இரவிலுமாக 10மணி நேரத்திற்கும் அதிகமாக மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.
இதனால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து பொது மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.தொடர் மின் வெட்டால் ரைஸ் மில்,லேத் பட்டரை ,உள்ளிட்ட பல் வேறு சிறு தொழில்களும் முடங்கியுள்ளது.இதை கண்டித்து 35க்கு மேற்ப்பட்ட பல்வேறு அமைப்புகளும் இணைந்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே இன்று காலை 11 மணியளவில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"இருட்டு ஆட்சியை கண்டிக்கிறோம் " என்று கோஷம் எழுப்பப்பட்டு ஆர்பாட்டம் செய்யப்பட்டது.மின் தடை கண்டித்து பலரும் பேசினர்.
இதில் திமுக,காங்கிரஸ் ,எஸ்டிபிஐ,தமுமுக,இந்திய தவ்ஹீத் ஜமாத் உள்பட அதிமுக தவிர அனைத்து கட்சியினரும், இயக்கங்கள் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீண்ட காலத்துக்கு பிறகு கீழக்கரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டதாக அப்பகுதியில் உள்ளோர் கூறினர்.

thanks to keelakaraitimes.
0 comments:
Post a Comment