ஈரானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்த வாய்ப்பே இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பா குற்றம் சாட்டி வருகின்றன. ஈரானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி தொடர்பாக அந்நாட்டு மத்திய வங்கியுடன் பணப் பரிமாற்றம் செய்ய அமெரிக்காவும், பெட்ரோல் இறக்குமதிக்கு ஐரோப் பாவும் அண்மையில் தடை விதித்தன. அதனால், பெட்ரோல் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் இந்தியாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள நிதியமைச்சர் பிரணாப் கூறியதாவது:
உலக அளவில் பெட்ரோல் பயன்பாட்டில் 4வது இடத்தில் உள்ள இந்தியா, பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. அதிலும், ஈரானில் இருந்துதான் அதிக அளவில் பெட்ரோல் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை குறைக்க வாய்ப்பே இல்லை. ஐரோப்பாவின் கடன் நெருக்கடி, வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி குறைவால் இந்தியாவின் வளர்ச்சி பாதித்தது. அதனால், 2011,12ல் நாட்டின் வளர்ச்சி 6.5,7 சதவீதமாக இருக்கும். இருப்பினும், அடுத்த அல்லது 2 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.
அவுட்சோர்சிங் நிறுத்த கூடாது: அமெரிக்காவில் இந்தியாவுக்கான அவுட்சோர்சிங் பணிகளை தடை செய்தால், இருநாட்டு பொருளாதாரமும் பாதிக்கும் என்பதால், தடை விதிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். அவுட்சோர்சிங் பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீது மறுஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.
as
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment