Wednesday, February 1, 2012

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்காதான்: ஒபாமா


வாஷிங்டன்:அல்காயிதா-தாலிபான் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்காதான் என அந்நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். சோசியல் நெட்வர்க் இணையதளமான கூகிள் ப்ளஸ் மூலமாக நடத்திய ஒரு மணிநேரம் நீண்ட வீடியோ உரையில் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்குலைந்ததன்
பின்னணியில் உள்ள ஆளில்லா விமானத் தாக்குதல்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஒபாமா.
முதன் முறையாக ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதற்கான பொறுப்பை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் அப்பாவிகள் ஆவர்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான கேள்விகள் ஒபாமாவின் உரைக்கு முன்பு அவரிடம் அளிக்கப்பட்டது. அமைதியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போராளி இயக்கங்களின் ரகசிய தளங்களை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஒபாமா அமெரிக்காவின் அநியாயமான செயலை நியாயப்படுத்தினார்.
அமெரிக்கா ராணுவத்தால் செல்ல முடியாத தூர பகுதிகளில் போர் விமானங்களின் உதவியுடன் ஏராளமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா தயார் செய்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்துகிறது. அமெரிக்க மக்களையும், அரசையும் எதிரிகளாக பார்க்கும் அல்காயிதாவை துடைத்தெறிவோம் என ஒபாமா கூறினார்.
பாகிஸ்தானில் பகுதி அளவிலான சுயாட்சி பிரதேசமாக கருதப்படும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் கடந்த ஆண்டு மட்டும் 64 ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியுள்ளது. 2010-ஆம் ஆண்டு 101 தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்..
thanks to asiananban.blogspot.com

0 comments:

Post a Comment