ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் முற்றுமுழுதாக நின்று போயின.
இந்நிலையில் ஈரானிய மக்களுடன் தொடர்பு கொள்ளும் முகமாக அமெரிக்கா புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி 'ஒன்லைன் ஈரானிய தூதரகம்' ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் இணைய முகவரி www.iran.usembassy.gov என்பதாகும். இவ்விணையத்தளமானது ஆங்கிலம், மற்றும் பார்ஷி மொழிகளைக் கொண்டுள்ளது.
எனினும் ஈரான் இதற்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. தனது நாட்டினுள் நுழைந்து, சுமுக நிலையை சீர்குலைக்க அமெரிக்கா மேற்கொண்டுள்ள சதித்திட்டமே இதுவென ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும் ஈரானிய மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தவே இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.
அமெரிக்கா மற்றும் ஈரானுடனான இராஜதந்திர உறவுகள் 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. இதன் போது தெஹ்ரானில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. சுமார் 444 நாட்கள் தொடர்ந்த இம்முற்றுகையின் போது 52 அமெரிக்கர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
yarlmuslim
0 comments:
Post a Comment