Wednesday, August 8, 2012

அஸ்ஸாம் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்: மாட்டிய(மத்திய) அரசு கூறுகிறது!


புதுடெல்லி:ஏராளமானோர் பலியான அஸ்ஸாம் வகுப்பு கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என மத்திய அரசு கூறுகிறது. போடோ பிரிவினை பயங்கரவாதிகளுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே அஸ்ஸாமில் நடந்த வகுப்பு கலவரத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் தற்பொழுது கட்டுக்குள் இருப்பதாகவும், புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் அஸ்ஸாமில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மீண்டும் அஸ்ஸாமில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐந்து இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிராங் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்ராஜரில் இரவு கால ஊரடங்கு உத்தரவு மட்டுமே தொடர்கின்றது. இங்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
பஸ்கா மற்றும் துப்ரி மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு நீடிக்கிறது. நேற்றும் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. துணை ராணுவமும், போலீஸும் ரோந்து பணியை தொடர்கின்றன. அஸ்ஸாம் கலவரத்தில் இதுவரை 61 பேர் கொல்லப்பட்டனர் என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிபரமாகும்

0 comments:

Post a Comment