Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Friday, September 7, 2012

இந்தியாவின் 100-வது ராக்கெட் 9-ந் தேதி விண்ணில் பாய்கிறது! இன்று கவுண்ட் டவுன் தொடக்கம்


இந்திய வானவெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி தனது முதல் வானவெளி பயணத்தை தொடங்கியது. அன்று, இஸ்ரோ நிறுவனம் தயாரித்த சொந்த செயற்கை கோளான ஆர்யபட்டாவை, ரஷியாவின் ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்தியது.
 
அதன் பின்னர் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி 62 செயற்கை கோள்களையும், பிற நாடுகளின் செயற்கை கோள்களை தாங்கிச்செல்லும் 37 ராக்கெட்டுகளையும் 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி உள்ளது.
 
9-ந் தேதி வானவெளியில் பாய இருக்கும் ராக்கெட் 'பி.எஸ்.எல்.வி.-சி21' ராக்கெட் இந்தியாவின் 100-வது ராக்கெட் ஆகும். இது, பிரான்ஸ் நாட்டின் 712 கிலோ எடையுள்ள 'ஸ்பாட்-6' என்கிற செயற்கை கோளையும், 15 கிலோ எடையுள்ள ஜப்பான் நாட்டின் செயற்கை கோளையும் ஏந்திச் செல்ல இருக்கிறது.
 
ஆகவே இது முழுக்க, முழுக்க வர்த்தக ரீதியான வானவெளி பயணம் ஆகும். இந்த ராக்கெட்டின் 51 மணி நேர 'கவுண்ட் டவுன்', இந்திய ராக்கெட் ஏவுதளங்களில் ஒன்றான ஸ்ரீஹரிகோட்டாவில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.51 மணிக்கு தொடங்குகிறது.
 
இந்த 'கவுண்ட் டவுன்' காலத்தில் ராக்கெட்டுக்கான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெறும் என்று 'இஸ்ரோ' நிறுவனம் தெரிவித்தது. 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.51 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப் பாயும்.
 
இந்த ராக்கெட்டில் 2 செயற்கை கோள்கள் தவிர 6 மோட்டார்களும் இடம் பெற்று உள்ளன. இந்த 100-வது ராக்கெட் தனது வானவெளி பயணத்தை மேற்கொள்ளும் காட்சியை, 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கும் பார்வையிட இருக்கிறார். 

Saturday, August 18, 2012

அஸ்ஸாமில் மீண்டும் கலவரம்.......


கொக்ராஜர்:அஸ்ஸாமில் கொக்ராஜரில் மீண்டும் உருவான கலவரத்தில் ஒன்பது பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.  காமரூப் மாவட்டத்திலும் கலவரம் பரவியுள்ளது.
கொக்ராஜரில் கோஸாயிகான் நகரத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் காயமடைந்த 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. காமரூப் மாவட்டத்தில் ரங்கியா பகுதியில் கலவரம் பரவியுள்ளது. இங்கு ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து இங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காமரூப் மாவட்டத்தில் ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது. பக்ஸாரில் இருந்து ரங்கியாவுக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்று காந்திபாரியில் வைத்து புதன்கிழமை இரவு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. காரின் ஓட்டுநர் ஷாஹிதுல் ஹுஸைனை காணவில்லை. தகவல் அறிந்த ஊர்மக்கள் ரங்கியாவில் தேசிய நெடுஞ்சாலையை மறித்தனர். வியாழக்கிழமை ரங்கியா எஸ்.டி.ஒ பர்ணாலி தேகாவின் காரையும் தாக்க முயற்சி நடந்தது. இதுத்தொடர்பான வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வன்முறையைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்து வானை நோக்கி சுட்டனர். எஸ்.டி.ஒ பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், குவஹாத்திக்கு சென்றுக்கொண்டிருந்த ஒரு பேருந்தையும், தேசிய பாதையில் சிக்கிய ஏராளமான வாகனங்களையும் கேகாஹந்தியில் ஒரு மரப்பாலத்தையும் வன்முறைக் கும்பல் தீவைத்துக் கொளுத்தியுள்ளது.
உயர் மாவட்ட அதிகாரி அப்பகுதியில் முகாமிட்டுள்ளார். காம்ரூப் மாவட்டத்தில் வன்முறை தொடர்ந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Wednesday, August 8, 2012

அஸ்ஸாம் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்: மாட்டிய(மத்திய) அரசு கூறுகிறது!


புதுடெல்லி:ஏராளமானோர் பலியான அஸ்ஸாம் வகுப்பு கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என மத்திய அரசு கூறுகிறது. போடோ பிரிவினை பயங்கரவாதிகளுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே அஸ்ஸாமில் நடந்த வகுப்பு கலவரத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் தற்பொழுது கட்டுக்குள் இருப்பதாகவும், புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் அஸ்ஸாமில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மீண்டும் அஸ்ஸாமில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐந்து இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிராங் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்ராஜரில் இரவு கால ஊரடங்கு உத்தரவு மட்டுமே தொடர்கின்றது. இங்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
பஸ்கா மற்றும் துப்ரி மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு நீடிக்கிறது. நேற்றும் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. துணை ராணுவமும், போலீஸும் ரோந்து பணியை தொடர்கின்றன. அஸ்ஸாம் கலவரத்தில் இதுவரை 61 பேர் கொல்லப்பட்டனர் என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிபரமாகும்

Saturday, August 4, 2012

புதிய தேர்தல் கமிஷனராக அகமது ஜெய்தி தேர்வாகிறார்!


தலைமை தேர்தல் கமிஷன் 3 உயர் அதிகாரிகளைக் கொண்ட அமைப்பாகும். அதில் தலைமை தேர்தல் கமிஷனராக ஒருவரும், தேர்தல் கமிஷனர்களாக 2 பேரும் உள்ளனர். தலைமை தேர்தல் கமிஷனராக குரேஷி, தேர்தல் அதிகாரிகளாக சம்பத், பிரம்மா இருந்தனர். 

கடந்த ஜூன் மாதம் குரேஷி ஓய்வு பெற்று விட்டதால் தலைமை தேர்தல் கமிஷனராக சம்பத் பதவி உயர்வு பெற்றார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் பதவி உயர்வு பெற்றதால், அவர் வகித்து வந்த தேர்தல் கமிஷனர் இடம் காலியானது. அந்த இடத்துக்கு அந்தமான் தீவு தலைமை செயலாளர் ஷெரீப் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. 

ஷெரீப்புக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆகும். இவர் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்படும் பட்சத்தில், தலைமை தேர்தல் கமிஷன் அமைப்பில் உள்ள 3 அதிகாரிகளில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஷெரீப் பாராளுமன்ற மேல்-சபை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. ஹமீத் அன்சாரி மீண்டும் துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஷெரீப் மேல்-சபை பணிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே காலியாக உள்ள தேர்தல் கமிஷனர் இடத்துக்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சையது நசீம் அகமது ஜெய்தி நியமனம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 60 வயதாகும் ஜெய்தி 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்தவர். இவரை தேர்தல் கமிஷனர் பதவியில் அமர்த்த பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்து விட்டார். அதன் பேரில் ஜெய்தி நியமன அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, August 3, 2012

அஸ்ஸாம் மக்களுக்காக உதவுங்களேன்....!


அஸ்ஸாம் மக்கள் மீண்டும் உங்களின் உதவியை எதிர்பார்கிறார்கள். 
அரசு தரப்பு டி.ஜி.பி  ஜே.என். செளத்ரியின் அறிக்கை படி அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் மொத்தம் 3,78,045 மக்கள் (முஸ்லிம்கள் 2,66,700, பெளத்தர்கள் 1,11,345) வீடுகளை இழந்து அநாதைகளாக ஆகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர்.


அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களின் விபரம் வருமாறு:

- நான்கு மாவட்டங்களில் மொத்தம் 235 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

- இதில் 99 முகாம்கள் பெளத்தர்களுக்காகவும், 135 முகாம்கள் முஸ்லிம்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு நலதிட்ட பணிகளை நடைமுறைப்படுத்தி வரும் ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் நேரடியாக களத்தில் இறங்கி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிய ரிஹாப் இந்தியாவிற்கு உதவுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறார்கள்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக உடனடியாக சில வசதிகளை செய்துகொடுக்க வேண்டியுள்ளது.

1. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்காக முறையான குடிநீர் மற்றும் உணவு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

2. மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.

3. உடுத்த உடை மற்றும் குளிரில் இருந்து பாதுகாப்பு பெற போர்வைகள் வழங்க வேண்டும்.

4. இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

ரிஹாப் இந்தியா சார்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு சமூக சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவைகள் உங்களின் பார்வைக்காக‌




ரிஹாப் இந்தியா மேற்கொண்ட பணிகள்:
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக  பரோடா மற்றும் அஹமதாபாத் ஆகிய மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டபோது அம்மக்களுக்கு உதவி செய்ய ரிஹாப் இந்தியா தன்னுடைய தொண்டு ஊழியர்களை அனுப்பியுள்ளது.


2006 ஆம் ஆண்டு கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது ரூபாய் 30 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

பீஹார் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் களத்தில் இறங்கி உதவி புரிந்தார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 1000 வீடுகள் கட்ட தீர்மானித்து தற்போது 54 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

ஏழை எளிய மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சுயதொழில் மூலம் முன்னேற்றம் அடைவதற்காக மூன்று சக்கர மிதி வண்டி, தையல் இயந்திரம் வழங்குதல்,  மேலும் மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முழு கிராமத்தையும் தத்தெடுத்து பல்வேறு நலதிட்ட உதவிகளை ரிஹாப் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

மேலும் விபரங்கள் அறிய:  http://rehabindiafoundation.org/portal/

தற்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தாராளமாக உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் செக்/ டி.டி அனுப்ப வேண்டிய முகவரி

REHAB INDIA FOUNDATION
N-44, Ground Floor, Second Stage,
Jamia Nagar, New Delhi - 110025.

(அல்லது)


RTGS/NEFT transactions

Bank Details:
Name : REHAB INDIA FOUNDATION
Account no : 09231450000033
Bank Name : HDFC Bank Ltd
Branch Name : Jasola Vihar
IFSC Code : HDFC0000923 (used for RTGS and NEFT transactions)


--
முழுவதும் படிக்க: http://chennaipopularfront.blogspot.com வலைப்பதிவிற்கு வருகைதாருங்கள்

வஸ்ஸலாம்.

Thursday, August 2, 2012

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு !


ஜெத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.
தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும். அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும். முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.
தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது,
எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார். கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம். நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம். அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.
இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில்,
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது. அதில் அடிக்கடி இநதியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
குறிப்பு:
ஒரு நாட்டில் டாலரைக்காட்டிலும் தங்கம் அதிகமிருந்தால்தானே பொருளாதாரம் முன்னுக்குவரும்?அப்படி என்றால் ஏன் நம் நாட்டு அறிவுஜீவிகள் தங்கம் கொண்டுவந்து நாட்டைகாப்பாற்றுபவர்களை கஸ்டம்ஸ் என்ற பெயரில் கபாலத்தில் தள்ளுகின்றார்கள்!?