Saturday, May 14, 2011

கெய்ரோவில் பலஸ்தீன் ஆதரவு பேரணி

egypt protest
கெய்ரோ:மேற்காசியா நாடுகளில் ஜும்ஆ தினத்தில் தொழுகைக்குப் பிறகு வலுப்பெரும் அரசுக்கு எதிரான பேரணிகளிலிருந்து வித்தியாசமான தினமாக அமைந்தது கெய்ரோவில் நேற்றைய வெள்ளிக்கிழமை. ஐக்கிய நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பலஸ்தீன் இயக்கங்களான ஹமாஸ் மற்றும் பத்ஹிற்கு கெய்ரோவின் விடுதலை சதுரங்கமான தஹ்ரீல் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவை பிரகடனப்படுத்தினர். நேற்று முன்தினம் வகுப்பு மோதல்கள் நடைப்பெற்ற பகுதிகளிலிருந்து இப்பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் மனிதநேயத்தின் முன்மாதிரிகளாக மாறினார்கள்.
பலஸ்தீன் சகோதர, சகோதரிகளை அடக்கி ஒடுக்கி கொடுமைக்கு ஆளாக்கும் மனித குல விரோதியான இஸ்ரேலின் சியோனிச கொள்கைகளுக்கு எதிரான முழக்கங்கள் முபாரக் எதிர்ப்பு போராட்டத்தின் சின்னமாக விளங்கிய தஹ்ரீர் சதுக்கத்தில் உச்சபட்ச குரலில் ஒலித்தன.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அடுத்த வாரம் காஸ்ஸாவிற்கு பேரணியாக செல்ல தன்னார்வ தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பேரணியை ரத்து செய்ய வேண்டுமென எகிப்தின் உள்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். எகிப்து நாட்டு மக்கள் காஸ்ஸாவிற்கு பேரணியாக செல்ல உகந்த நேரமல்ல இது என ஹமாஸின் தலைவர் காலித் மிஷ்அல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நீதியை நிலைநாட்ட வேண்டுமெனக்கோரி தொலைக்காட்சி தலைமையகத்தின் முன்னால் காப்டிக் கிறிஸ்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

0 comments:

Post a Comment