Wednesday, May 11, 2011

மந்தநிலையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை

images
மும்பை:2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)யிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் காலதாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. வழக்கை கையாள சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றத்தை உருவாக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை மந்தநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.இதுத்தொடர்பாக அரசு அறிவிக்கையை வெளியிடாததால் விசாரணை நடவடிக்கைகள் துவங்கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.என்.ஐ.ஏ சட்டத்தின் படி வழக்கின் விசாரணை பொறுப்பை ஏற்று ஏழு தினங்களுக்குள் சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்கவேண்டும் என்பதாகும்.
சிறப்பு நீதிமன்றம் உருவாக்குவதற்கு கோரப்பட்டுள்ள ஆவணங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும்,நடவடிக்கைகள் பூர்த்தியானபிறகு அறிவிக்கை வெளியிடப்படும் என நம்புவதாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் என்.ஐ.ஏ வழக்குகளை கையாளும் சிறப்பு அரசுதரப்பு வழக்கறிஞர் ரோஹினி ஸலைன் தெரிவித்துள்ளார்.
2-அது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யாசிங் தாக்கூர், கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், உள்ளிட்ட 11 ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்புடன் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, முதல் மலேகான், மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட வழக்குகளையும் என்.ஐ.ஏ விசாரிக்கிறது.
முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச்செய்யப்பட்டனர்.பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அக்குண்டுவெடிப்பையும் நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் என்பது தெரியவந்தது.
இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கும் முஸ்லிம்களை நோக்கி திரும்பியவேளையில் நேர்மையான ஏ.டி.எஸ் தலைமை அதிகாரி ஹேமந்த் கர்காரேயின் நீதியான விசாரணையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது அபினவ்பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பு என்ற உண்மை வெட்டவெளிச்சமானது. ஆனால்,கர்காரே மும்பைத்தாக்குதல் வேளையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
என்.ஐ.ஏ நீதிமன்றம் அமுலுக்கு வராத நிலையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையை நடத்தக்கோரி கடந்த மாதம் 15-ஆம் தேதி என்.ஐ.ஏ மஹாராஷ்ட்ரா மோக்கா நீதிமன்றத்தை அணுகியது. ஆனால்,என்.ஐ.ஏ வழக்குகளை கையாள நீதிபதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனக்கூறி என்.ஐ.ஏவின் மனுவை நீதிபதி ஒய்.டி.ஷிண்டே நிராகரித்துவிட்டார். வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதும், விசாரணையும் நீண்டுக்கொண்டு செல்வது குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது.

0 comments:

Post a Comment