சிகாகோ : அமெரிக்காவின் ஜோப்லின் நகரில் நேற்று பயங்கரமான சூறாவளி வீசியது. இதில் 24 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் மிசோரி மாநிலம் ஜோப்லின் நகரில் நேற்று கடும் சூறாவளி வீசியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. அங்கு தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி 24 பேர் பலியாயினர்.
மிசோரி கவர்னர் ஜே நிக்சன் அவசர நிலை அறிவித்து நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள 7 மாநிலங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி மொத்தம் 354 பேர்பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment