அமெரிக்காவைப் பொருத்தவரை சர்வதேச சட்டங்களை என்றுமே மதித்ததில்லை. தனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் வரை செல்லப்பிள்ளையாகவும் தனது கட்டுப்பாட்டை மீறி எகிறினால் போட்டுத் தள்ளுவதுமே அமெரிக்க வகுத்த சட்டமாகும்.
சர்வதேச தீவிரவாதியாகச் சொல்லப்படும் ஒசாமா பின்லேடன் அமெரிக்க நலனுக்கு எதிராகச் செயயல்பட்டவரே. நியாயப்படியும் சட்டப்படியும் எத்தகைய குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே நியாயவான்கள் விரும்புவர்.
மே-1,2011 நள்ளிரவில் பாகிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் நிராயுதபாணியாக தங்கியிருந்த பின்லேடனை மடக்கிப் பிடிக்க முடிந்திருந்தும், அதைச் செய்யாமல், சுட்டுக்கொன்றதோடு உடலை கடலில் தூக்கிவீசி சர்வதேச மனித விதிகளை அமெரிக்க ராணுவம் மீறியுள்ளதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அமெரிக்காவின் அடாவடிச்செயல் காரணமாக பின்லேடனை விரும்பாதவர்களும் தற்போது அனுதாபப் படும்படி அமெரிக்கா செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கேர்னியின் அறிக்கையில் பின்லேடன் கொலை நடவடிக்கையின் போது எத்தகைய எதிர்ப்பை அமெரிக்க ராணுவம் சந்தித்து என்பதைச் சொல்ல மறுத்துள்ளார். மிகப்பெரும் எதிர் தாக்குதலை எதிர்பார்த்திருந்தோம். பின்லேடன் வீட்டைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வீரர்கள் சிலர் இருந்தபோதிலும் அப்படி எதுவும் விபரீதமாக நடக்கவில்லை" என்று தெரிவித்தார்.
பின்லேடன் படுகொலை மற்றும் கொல்லப்பட்ட விதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மன் முன்னாள் பிரதமர் ஹெல்முட் ஸ்மிட்த் ஜெர்மன் தொலைக்காட்சிக்கு அளித்து பேட்டியில்,"அமெரிக்காவின் இந்நடவடிக்கை அரபுலகில் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கணிக்க முடியவில்லை" என்று கவலை தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலிய மனித உரிமைக் கழக உயர் வழக்கறிஞர் ஜாஃப்ரி ராபெர்ட்சன் கூறுகையில்,"அநீதி மட்டுமின்றி நீதியை மறுக்கும் செயலாகும். நீதி என்பது சட்டத்தின் முன்பாக நிறுத்தி, குற்றங்களை நிரூபித்து, ஆதாரங்களின் அடிப்படையில் தண்டிப்பதாகும். சுருக்கமாக, இது சர்வதே சட்டங்களைமீறியச் செயல்" என்று சாடியுள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் பிடிபட்ட நாஜிக்களும், யூகோஸ்லேவியா அதிபர் மிலோசெவிக்கும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டதைப் போல்,பின்லேடனையும் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும்"என்றார்
பின்லேடனைப் பிடித்து நியூயார்க்கின் ஒதுக்குப்புறமுள்ள ஒரு பண்ணையில் தனிமையில் விட்டிருக்கலாம்.தான் அமெரிக்காவுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டு எளிதில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று விரும்பியதையே அமெரிக்கா எளிதாகச் செய்துகொடுத்துள்ளது என்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஆஸ்திரேலிய ப்ராட்காஸ்ட் செய்திச்சேனலில் கருத்து சொல்லியுள்ளார்.
அமெரிக்காவைப் பொருத்தவரை காட்டுமிராண்டிச் சட்டத்தை ஆப்கன், ஈராக், பாகிஸ்தான் மற்றும் லிபியாவில் விரும்பியபோதும் மக்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் தற்போது அமெரிக்கா அனைத்து வரம்புகளையும்மீறி உள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் டெல்லி ஜுமா மசூதி இமாம் புகாரி.
பாகிஸ்தான் மனித உரிமைக்கழக உயரதிகாரி I.A.ரெஹ்மான்," பின்லேடன் கொல்லப்பட்டதைவிட அவரை தகனம் செய்த முறை அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகி உள்ளது என்றார்.
இந்தோனேசிய அன்சாருத் தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் சான் ஹாத் கூறுகையில்,"கடவுளின் பொருத்தத்திற்காக போரில் ஈடுபடும்போது கொல்லப்படுபவர் புனிதப்போராளிகளுக்குறிய சிறப்பைப் பெறுவார். அவ்வகையில் பின் லேடன் ஓர் புனிதப்போராளிக்குறிய தகுதியைப் பெற்றுள்ளார்" என்றார்.
சவூதி மன்னரின் மார்க்க ஆலோசகர் ஷேக் அப்துல் மொஹ்சின் அல் ஒபைகான். "பின்லேடனை தகனம் செய்த முறை இஸ்லாமிய முறை அல்ல. நிலப்பகுதியில் இறந்தவரை மற்ற மனிதர்களைப்போல் நிலத்திலேயே புதைக்க வேண்டும்" என்றார்
"இறந்தவரைப் புதைப்பது என்பது இஸ்லாமியர்களைப் பொருத்தவரை மார்க்கக்கடமை. அசாதாரண சூழல்களில் மட்டுமே மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம். ஆனால்,பின்லாடன் கொலையில் அப்படி எதுவும் அசாதாரண சூழல் நிலவியதாகத் தெரியவில்லை. தனது செயலுக்கு அமெரிக்கா உரிய காரணத்தை விளக்கவில்லையே அது மனித உயிர்களை விலங்குகளைப்போன்றே கருதுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது" என்று இந்தோனேசிய உலமா கவுன்ஸில் உறுப்பினர் அமிதான் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment