Thursday, May 12, 2011

அலிகர்:38 மாணவர்கள் சஸ்பெண்ட்

images
அலிகர்:அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடந்த மாணவர்களிடையேயான மோதல் தொடர்பாக 38 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 38 மாணவர்கள் பல்கலைக்கழக சட்டங்களை மீறியதற்கான ஆரம்ப கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக  பாதுகாப்பு பொறுப்பை வகிக்கும் proctor(பல்கலைக்கழக ஒழுங்கு காவலர்) முஜாஹித் பேக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் விசாரணை நடத்தாமல் மாணவர்களை சஸ்பெண்ட் செய்த நடவடிக்கை அநீதிமானது என அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் யூனியன் குற்றஞ்சாட்டியுள்ளது.
மாணவர்களிடையே நடந்த மோதலைத் தொடர்ந்து காலவரையற்று மூடப்பட்ட பல்கலைக்கழகம் நாளை திறக்கவிருக்கையில் இந்த சஸ்பெண்ட் உத்தரவு வெளியாகியுள்ளது. இதற்கிடையே பல்கலைக்கழக துணைவேந்தரின் அலுவலகம் முன்பு தர்ணா நடத்திவரும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர்களின் அமைப்பு தங்களுடைய நிலைப்பாட்டில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது.
தங்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிர்வாகம் அங்கீகரிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் நுழைவுத்தேர்வு பணிகளை புறக்கணிப்பதற்கான தீர்மானத்தை கைவிட்டதாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அசோசியேசன் செயலாளர் முஸ்தஃபா ஸைதி அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment