Tuesday, May 31, 2011

தேடப்படும் குற்றவாளி முஷாரப் : பாகிஸ்தான் கோர்ட் அறிவிப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு, அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது. பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில், பெனாசிர் புட்டோ கொலை வழக்கு நடந்து வருகிறது. இக்கோர்ட் மூலம் முதலில் முஷாரபுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. முஷாரப் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை கைது செய்ய உதவி புரியும்படி பாக்., தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை, சட்டச் சிக்கல்களைக் காட்டி பிரிட்டன் மறுத்துவிட்டது. இதனால், நேற்று நடந்த விசாரணையில், முஷாரபை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, அவ்வாறே அறிவித்தார். இதுகுறித்த விளம்பரங்கள் பத்திரிகைகளில் விரைவில் வெளிவர வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதோடு, முஷாரபின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் விரைவில் ஈடுபடுவர்

0 comments:

Post a Comment