Friday, May 20, 2011

இந்திய அரசியலில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு குட்பை!!

May 20, தமிழ் நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் குறிப்பாக இந்து இனவாதத்தை அடியோடு நிராகரிக்கும் மனப்பாங்கை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி இதற்கு சிறந்த சான்று. அதன் முன்னிலை தலைவர்கள் டிபோசிட்டை இழந்தது தமிழ் நாட்டில் ஹிந்துத்துவா அரசியல் என்பது வெறும் கனவே என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழகம், மற்றும் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சீட்டுகூட எடுக்க முடியவில்லை.
அதுபோல் மேற்குவங்கமும் இவர்களது மதவாத அரசியல் எடுபடவில்லை. இந்தியாவில் மக்களால் புறம்தள்ளபட்ட ஒரு கட்சியாக பாரதிய ஜனதா மாறியுள்ளது. இந்தியாவின் மதசார்பின்மை மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

மீண்டும் ஹிந்துத்துவா பாரதிய ஜனதா 5 வருடங்களிற்கு மாநில அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். பெரியாரும், அண்ணாவும், காமராஜரும் செய்த உழைப்புகள் வீண்போகவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இதில் முதல்வர் ஜெயலிதாவின் நடவடிக்கைகள் மீண்டும் சிறுபான்மை மக்களின் கோபங்களை கிளருவதாகவே உள்ளது. முஸ்லீம் சிறுபான்மை மக்களை ஒரு இனபடுகொலைக்கு உட்படுத்திய நரேந்திர மோடியை பதவி ஏற்ப்பு விழாவுக்கு அழைத்தது ஜெயலலிதாவின் மீது ஒரு நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது.

0 comments:

Post a Comment