Tuesday, May 31, 2011

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தன. 

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. 

இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது. 

இந்நிலையில் புகைப்பிடிப்பதன் காரணமாக இலங்கையில் ஒரு நாளைக்கு தலா 50 - 60 பேர்வரை உயிரிழப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புகைப்பிடிப்பதனால் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு நாளைக்கு தலா 15 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

0 comments:

Post a Comment