Wednesday, May 18, 2011

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடையவில்லை: கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம்


SSLC Examination

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி இன்னும் முடிவடைவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சுமார் 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.

இந் நிலையில் இந்தத் தேர்வு முடிவுகள் முதலில் மே 25ம் தேதி வெளியாகும் என்று கல்வித்துறை செயலாளராக இருந்த சவீதா அறிவித்தார். பின்னர் அந்த தேதியை மாற்றி வேறு தேதியில் வெளியிடப்படும் என்று திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இந் நிலையில் புதிய பள்ளிக் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி.சண்முகத்திடம் தேர்வு முடிவுகள் குறித்து கேட்டதற்கு,

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பணி இன்னும் முடியாததால் ரிசல்ட் எப்போது வெளியிடப்படும் என்பதை உறுதிபடுத்த இயலாது. தேதி முடிவாகிவிட்டால் அதை 2 நாட்களுக்கு முன் அறிவிப்போம் என்றார்.

சமச்சீர் கல்வி புத்தக வினியோகம் நிறுத்தம்:

இந் நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை வினியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக த‌கவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக அறிவியில் மற்றும் தமிழ் பாடப் புத்தகங்களில் சில பாடங்கள் நீக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில பாடங்களை மட்டும் நீக்கி விட்டு பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என்றும், எந்‌தெந்த பாடப் பிரிவுகளை நீக்குவது என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடப்பாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment