Saturday, May 21, 2011

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை: ம.பி அரசு அறிவிப்பு


போபால் : இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பல மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாக அபராதம் விதிக்கப்படுகிறது. புதுடெல்லியை ஒட்டிய நொய்டா மற்றும் உ.பி.யில் உள்ள பருக்காபாத் ஆகிய நகரங்களில் ஹெல்மெட் போடாதவர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் போடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற உத்தரவு மத்திய பிரதேச தலைநகர் போபாலிலும் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை போபால் கலெக்டர் மனோஜ் ஸ்ரீவத்சவா நேற்று பிறப்பித்தார். ஹெல்மெட் அணியாத குற்றத்துக்காக கடந்த 10 நாட்களில் மட்டும் 45 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களிடமிருந்து ரூ. 20 லட்சம் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவம் மனோஜ் தெரிவித்தார். ஹெல்மெட் அணியாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது என கடந்த வாரம் உயர்கல்வித்துறை அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment